Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 246 (22/12/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 246 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 17

இடமிருந்து வலம்

01 – 04 ஒரு வகையில் அதிகாரத்தின் சின்னம்
04 – 06 இலக்கியத்தில் எனில் இயற்கை சூழலினைக் கொண்டு பிரிக்கப்பட்டது (வலமிருந்து இடம்)
08 – 11 முன்னோர்களின் தொடக்கமான இது கரியமிலவாயுவை உறிஞ்சி சுத்தமான பிராணவாயுவாக மாற்றும் வலிமை கொண்டது (குழம்பி வருகிறது)
27 – 29 வசந்த காலத்தின் வருகையை உணர்த்தும் (வலமிருந்து இடம்)
31 – 33 வடிவம் அல்லது அழகு
33 – 36 சுயநினைவையும் குறித்து நிற்கும் (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 13 சிறப்பு வெளியீட்டு நூலும் இப்பெயரால் அழைக்கப்படும்
19 – 31 இரக்கத்தையும் தெரிவிக்கும் சொல் (குழம்பி வருகிறது)
02 – 14 ஏழு ஸ்வரங்களுள் முதல் ஸ்வரமான “ச” என்பதைக் குறிப்பது
14 – 26 அன்புக்குரியவர்களுக்கிடையேயான பிணக்கு (கீழிருந்து மேல்)
03 – 21 குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் திரண்டிருக்கும் உயிரினத்தொகுதி (குழம்பி வருகிறது)
04 – 22 சிந்தனை அல்லது கருத்து (கீழிருந்து மேல்)
23 – 35 பிறருக்கான நன்மையான இதனால் ஒருவரின் வேலைப்பளுவையும் குறைக்கலாம் (கீழிருந்து மேல்)
12 – 24 வழக்கத்திற்கு மாறான தன்மை
30 – 36 வளைவு இல்லாத நிலை

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல245 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 அரட்டை
07 – 11 அந்தரம்
16 – 18 கவிதை
19 – 23 களங்கம்
25 – 27 கவரி
31 – 34 காவியம்
34 – 36 துறவி

மேலிருந்து கீழ்

01 – 31 அரசாங்கம்
08 – 26 பவளம்
09 – 21 தடம்
16 – 34 விடுகதை
06 – 12 சிறை
24 – 36 எளிது

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 245 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 245 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...