Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 243 (01/12/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 243ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 14

இடமிருந்து வலம்

01 – 05 ஒன்றை மையமாகக் கொண்டு நவரச உணர்வுகளை வெளிப்படுத்தும்.
08 – 09 அன்பெனில் ஏற்கக்கூடிய இது காழ்ப்புணர்ச்சி சார்ந்ததெனில் தவிர்க்கப்பட வேண்டியது.
10 – 12 இயற்பண்பெனினும் மரபுவாதிகளால் வகுக்கப்பட்டவற்றுள் ஒன்று (வலமிருந்து இடம்)
22 – 23 அனுபவிக்கும் சிரமம் (வலமிருந்து இடம்)
23 – 24 உணவு, உயிரியல், இலக்கணம் மூன்றுடனும் பொருந்தக்கூடியது.
27 – 28 ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கும் (வலமிருந்து இடம்)
31 – 36 சமஸ்கிருத வழி வந்த நாடக நூல்

மேலிருந்து கீழ்

01 – 13 பல உலோகங்களின் கலவையான இதன் பிற்பகுதி விடையாக வருகின்றது
13 – 31 அரசுகளின் ஒப்பந்தம் (கீழிருந்து மேல்)
20 – 32 இரசனைக்குட்பட்ட வரையறை அற்றது
09 – 15 எல்லை அல்லது பாதுகாப்பு கருதி அமையும் (கீழிருந்து மேல்)
21 – 27 ஊசிகளால் துளைத்து தைக்கப்பட்ட ஆடைகள் தூய்மையற்றவை எனக்கருத்தியதால் இது முன்னோரால் பயன்படுத்தப்பட்டதாகவும் கருத்து உண்டு.
04 – 16 மனநோயாகவும் சிலருக்கு அமைவதுண்டு (குழம்பி வருகிறது)
05 – 17 நல்லதும் கெட்டதுமான மனித இயல்புகளை உள்ளடக்கியது (கீழிருந்து மேல்)
23 – 35 இணைப்புக்குரியது (குழம்பி வருகிறது)
18 – 36 நிலையற்றது என அறிந்தும் சிலரால் முன்னிலைப்படுத்தப்படுவது

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 242ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 தலையாட்டி
08 – 11 வரப்பு
19 – 23 திருப்பம்
32 – 34 புயல்
34 – 35 கல்

மேலிருந்து கீழ்

01 – 31 சுதந்திரம்
14 – 32 நெருப்பு
16 – 28 பலம்
11 – 35 வர்க்கம்
06 – 18 உயிர்
18 – 36 உறுதுணை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 242 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
ஜெயந்தி, ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திருமதி.லாலா ரவி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 242 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...