Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 241 (17/11/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 241ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 06,20,35

இடமிருந்து வலம்

01 – 05 எல்லை மீறிய அட்டூழியம் அல்லது பயனற்று போதலையும் குறிக்கும்
09 – 12 நிர்ணயிக்கப்பட்ட அளவான இது மனிதருக்கானால் அளவு கடந்தது (குழம்பி வருகிறது)
14 – 16 அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயல் (குழம்பி வருகிறது)
26 – 27 மூன்று அடுக்குகளைக் கொண்ட இது 13 வயதில் முழு வளர்ச்சி அடையும் (வலமிருந்து இடம்)
31 – 33 சிலருக்கு சிலரின் வாக்கு (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 31 இறுமாப்பு
02 – 14 தடுக்கப்படும் ஒளியால் தோன்றக்கூடியது
15 – 27 எதிர்பார்ப்பு வீணாகும் போதும் வீணான எதிர்பார்ப்புகளின் பலனும் ஏற்படுத்தக்கூடிய விளைவு (கீழிருந்து மேல்)
16 – 34 ஊர்வனவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க மூதாதையரால் ஏற்படுத்தப்பட்டது
05 – 23 நீதிக்குட்பட்ட நியாயம் (கீழிருந்து மேல்)
23 – 29 முதல் எனவும் பொருள் தரும்
18 – 36 இதனைக் கட்டுப்படுத்தினால் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பது மருத்துவர்கள் கணிப்பு

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 240ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 தன்மானம்
07 – 09 வலது
09 – 12 துக்கம்
14 – 18 உற்பத்தி
20 – 21 ஏழு
31 – 34 மூங்கில்
35 – 36 ஆடை

மேலிருந்து கீழ்

01 – 13 தவம்
19 – 31 ஒயில்
20 – 26 ஏடு
09 – 27 எழுத்து
10 – 34 மூக்குத்தி
05 – 23 ஞாபகம்
30 – 36 வாடை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 240 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
ஜெயந்தி ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 240 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...