Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 236 (06/10/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 236 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 15,29,32,36

இடமிருந்து வலம்

01 – 05 நம்பமுடியாத நிகழ்வு ஏற்படுத்தும் வியப்பு
08 – 12 ஒருவித உள்ளுணர்வு (குழம்பி வருகிறது)
16 – 17 உலக பந்தத்திலிருந்து விடுபட்ட முக்திநிலைப் பேறு ஒன்றின் முற்பகுதி விடையாக வரும்
21 – 22 மனதுக்கு உகந்தவற்றுள் இனிமை சேர்க்கும் ஒன்று
26 – 27 மனிதர்களுக்கான தொடர்பாடல் கருவி எனவும் கூறலாம்
33 – 35 முகத்திலும் அகத்திலும் ஏற்படக்கூடியது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 சோர்வெனவும் பொருள் தரக்கூடிய இது ஆர்வக்குறைவையும் தரும்
19 – 31 ஒத்த கருத்தின் அடிப்படையிலும் தோன்றக்கூடிய சுமூகமான உறவு (கீழிருந்து மேல்)
02 – 20 இசைவு அல்லது ஒப்புதல் (கீழிருந்து மேல்)
21 – 33 தரக்குறைவு
28 – 34 மிகச்சிறிய அளவு
11 – 23 குவிந்த இதழ்கள் (குழம்பி வருகிறது)
06 – 18 வாழ்வியல் பற்றிய முழுமையான தெளிந்த அறிவு
18 – 30 அனைத்து உயிரினங்களுக்கும் உண்டாகக்கூடிய வேட்க்கை (கீழிருந்து மேல்)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 235 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 உளவியல்
08 – 10 அருகு
26 – 27 தூசு
27 – 30 தூக்கம்
31 – 33 கோளாறு

மேலிருந்து கீழ்

01 – 13 உச்சி
25 – 31 ஊறு
02 – 20 விளக்கு
15 – 27 தூய்மை
16 – 34 சறுக்கு
05 – 23 ஆம்பல்
06 – 24 துயரம்
24 – 36 துகள்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 235 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சித்திரா பவன் நோர்வே
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திரு.திக்கம் நடா
திருமதி.ஜெனி அன்ரன்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 235 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...