Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 234 (15/09/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 234 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 16, 28, 31, 36

இடமிருந்து வலம்

01 – 04 பின் நிகழ்வை முன் நிகழ்த்தி பார்த்தல்
08 – 10 இளைஞர்களை ஈர்க்கும் பாடல் வகை
13 – 14 களங்கம் எனவும் பொருள் தரும் (வலமிருந்து இடம்)
21 – 23 சராசரியை விட நீண்டிருக்கும் அளவான இது பார்வையெனில் தீர்க்கமானது.
25 – 26 அழகுணர்வை தோற்றுவிக்கும் இது வினையானால் சிதைத்தல் அல்லது நீக்குதல்
32 – 34 சில நாடுகளில் செலாவணியாகும் நாணயம்

மேலிருந்து கீழ்

01 – 13 பாகுபாடு இல்லாத நிலையெனவும் கருதக்கூடிய சொல்லான இது ஐக்கியமாதலையும் குறிக்கும்.
13 – 19 திரவமாக பார்க்கப்படும் இது நிலத்தை பதனிடுதலையும் குறிக்கும் (கீழிருந்து மேல்)
14 – 26 திருத்தமற்ற இனிய பேச்சு
03 – 21 மங்கலத்தின் அறிகுறியாக நோக்கப்படுவது (கீழிருந்து மேல்)
21 – 33 உத்தேசமாக நிர்ணயிக்கப்படக்கூடியது
05 – 23 வெளித்தோற்றம்
23 – 35 நடனம் (கீழிருந்து மேல்)
06 – 18 கருத்து வேறுபாடு காரணமாக உருவாகும்.
18 – 30 அழகு

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 233 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சங்கமம்
08 – 10 சிப்பி
13 – 17 திருமணம்
19 – 22 ஆகாயம்
26 – 30 அவதாரம்
35 – 36 சுவை

மேலிருந்து கீழ்

13 – 31 ஆலயம்
02 – 32 சிருங்காரம்
27 – 33 அலை
10 – 34 பிரணவம்
17 – 23 நதி
12 – 30 தியாகம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 233ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.லாலா ரவி பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.சித்திரா பவன் நோர்வே
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திரு.கனகசுந்தரம் யேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திரு.திக்கம் நடா சுவிஸ்
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன் பிரித்தானியா
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 233 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...