Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 226 (26/05/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 226ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 31

இடமிருந்து வலம்

01 – 06 திடமானதெனினும் தற்காலிக தன்மை கொண்டது.
10 – 11 மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவது.
19 – 22 மிகப்பெரும் சாதனை , தேர்ச்சி பெற்றவர்களுடன் ஒப்பிடப்படுவது (குழம்பி வருகிறது)
25 – 29 மிக மென்மையானது என இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுவது (வலமிருந்து இடம்)
32 – 35 சூரிய ஒளியின் பிரதிபலிப்பு 

மேலிருந்து கீழ்

01 – 25 பரிச்சயம் அல்லது ஒன்றைப்பற்றி அறிந்து கொள்ள தரப்படும் விளக்கம் 
02 – 20 ஒலி , ஒளி அலைகளுக்கான சமிக்ஞைகளுக்கும் உதவும் (குழம்பி வருகிறது)
20 – 32 சிறைக்கும் பொருந்தும் (கீழிருந்து மேல்)
09 – 21 கணக்கியலின் படி நோக்கினால் பயன் கொடுத்தலைக் குறிக்கும் (குழம்பி வருகிறது)
10 – 22 உண்மையென உறுதிப்படுத்துபவரையும் குறிப்பிடலாம் 
05 – 23 பூமிப்பந்தின் சில பிரதேசங்களில் வாழும் மக்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் அரணாக அமையும் , அவர்களுக்கானது.
12 – 18 நினைவுச்சின்னங்களாகவும் புகழ் பெறுவதுண்டு.
18 – 24 பொறுப்பு அல்லது கடமை (கீழிருந்து மேல்)
24 – 36 வெளிப்படைத்தன்மையற்றது 

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 225 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 சாம்பல் 
04 – 06 விரல் 
09 – 11 பாடம் 
20 – 24 கடிகாரம் 
26 – 29 பின்னணி 
31 – 32 தூசு 
33 – 35 வாசனை 

மேலிருந்து கீழ்

01 – 13 சாயல் 
13 – 25 மையல் 
02 – 20 காரணம் 
03 – 15 படகு 
10 – 34 பிடிவாதம் 
12 – 24 மௌனம்
30 – 36 பொய் 

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 225ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன் யேர்மனி
திருமதி.சித்ரா பவன் , நோர்வே
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம்,
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி .சொரூபி மோகன் , சுவிஸ்
திருமதி ஜெயசுதா ராஜன் யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திரு.திக்கம் நடா சுவிஸ்
திருமதி. ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 225ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...