Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 324 (11/12/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 324ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் : 16, 27

இடமிருந்து வலம்

01 – 05 விக்கிரகங்களுக்கான திருமுழுக்கு
09 – 12 மகிழ்வான நேர்மறை எண்ணங்களைத் தரக்கூடிய இது ஒளியைக் குறிக்கவும் பயன்படும்.
20 – 22 உண்மைத் தன்மையை முற்று முழுதாக உணர்ந்து கொள்ளும் போது ஏற்படும் (குழம்பி வருகிறது)
25 – 26 அதிகாரத்தின் அறிவுறுத்தல்
31 – 33 திருக்குறளின் அதிகாரங்களுள் ஒன்றான இது இரத்தலை விளக்குகின்றது.
33 – 36 குறுக்கு

மேலிருந்து கீழ்

01 – 19 முன்னோர்களுக்கான வேண்டுதல்களை நிறைவேற்றவும் உகந்ததாக நோக்கப்படுகிறது
19 – 25 தேவையைக் கொணர்வதற்கான ஆர்வம் (கீழிருந்து மேல்)
02 – 14 அரசியல் கட்சிகள் பல காணாமல் போவதற்கு இதுவும் ஏதுவாகிறது
09 – 21 நம்பிக்கையின் அடிப்படையில் விழுமியங்கள் பின்பற்றப்படுவது
28 – 34 மறுபிறப்பின்மையை உணர்த்தி இறைவனோடு ஐக்கியமாவதைக் குறிக்கும் பேறு எனப்படுவது
05 – 23 ஆழ்ந்த வெறுப்புடன் கூடியது (கீழிருந்து மேல்)
23 – 29 தொடர்ந்து வரும் சந்ததியின் தோன்றலும் இவ்வாறு அழைக்கப்படும்
06 – 12 சிலரின் பேச்சும்…
18 – 36 அலட்சியப்படுத்தப்படினும் அவசியமாகும் தருணமும் ஏற்படும்.

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 324

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 323ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சஞ்சாரம்
08 – 11 நூதனம்
13 – 15 குளிர்
15 – 16 நேர்
19 – 22 சாகசம்
26 – 30 சங்கமம்
31 – 35 அனுபவம்

மேலிருந்து கீழ்

01 – 13 சங்கு
19 – 31 சாபம்
04 – 16 நேரம்
05 – 23 கடிதம்
06 – 24 சிந்தனை
24 – 36 யோசனை

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 323 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 323 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு. திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திரு. திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 323ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...