Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 317 (03/04/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 317 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 14, 27, 29, 31

இடமிருந்து வலம்

01 – 04 தேவையறிந்து உவந்தளிக்கும் குணம்
04 – 06 பூமி சுற்றி வரும் நிலையும் சாய்ந்த கோணமுமே இதற்கான காரணம் (வலமிருந்து இடம்)
08 – 09 உடலுக்கு வடிவத்தைத் தரும் எலும்பாலானது
16 – 17 மாற்றத்திற்கு உட்பட்டாலும் மாறாதிருத்தல்
20 – 22 நிறத்திற்கான கலவை
22 – 24 முந்தைய கால கட்டங்களில் அதி வெண்மைக்கானதாக எம்மால் நோக்கப்பட்டது (குழம்பி வருகிறது)
25 – 26 ஒரு பொருளை மறைபொருளாக விபரித்து வினவல் (வலமிருந்து இடம்)
32 – 36 வஞ்சனைக்குரியது எனினும் சாமர்த்தியமும் உரியதாக கருதப்படும்

மேலிருந்து கீழ்

01 – 13 கணக்கியலில் பற்றுக்கானது
13 – 25 தேர்வுகள் மற்றும் தேர்தல்களின் போது எதிர்பார்ப்புக்குள்ளாவது (குழம்பி வருகிறது)
09 – 15 காரசாரமான விவாதங்களின் தீவிரமும் இவ்வாறு அமையும் (கீழிருந்து மேல்)
04 – 16 இதன் ஒளியற்ற தன்மையே கருமை என்னும் வரையறைக்குட்படுகிறது (கீழிருந்து மேல்)
16 – 34 இடையூறுகள் அற்ற ஆசுவாசமான நிலை
11 – 17 சிற்றிலக்கியங்களில் காணப்படும் சிலவகை
12 – 36 பழந்தமிழரால் நோயெதிர்ப்பு சக்தியாக காணப்பட்டது (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி 317 (03.04.2022)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 316 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.பத்மராணி ராஜரட்ணம் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 316ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 விஸ்வரூபம்
10 – 12 களம்
14 – 17 சாக்கடை
21 – 23 அச்சு
25 – 20 சுதந்திரம்
31 – 32 கறை
33 – 36 ஆயுதம்

மேலிருந்து கீழ்

01 – 19 விலங்கு
14 – 26 தகடு
03 – 21 அறுவடை
05 – 17 சாபம்
06 – 24 உலகம்
24 – 36 உரம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 316ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
அருணா விக்கினேஸ்வரன் நெதர்லாந்து
திருமதி சித்ரா பவன் நோர்வே
திரு திக்கம் நடா சுவிஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.தேவி தனராஜ் பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 316ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...