வானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 201 (18/11/2018)
அன்பான நேயர்களே! வானொலி குறுக்கெழுத்துப் போட்டி நிகழ்ச்சியானது இலக்கம் 200 வரை ஒலிபரப்பாகி நிறைவு செய்திருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று முதல் மீண்டும் இலக்கம் 201ல் இருந்து ஆரம்பமாகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 6,15,16
இடமிருந்து வலம்
1 – 5 குடும்ப வாழ்க்கையான இதற்கு சகிப்புத்தன்மை அவசியம்
8 – 12 தேன் பாங்கு என்ற சொல்லே மருவி இவ் இசை வடிவமாக தோற்றம் பெற்றது எனவும் கூறப்படுகிறது.
21 – 23 பல்வேறு துறைகளுள் ஒன்றான இது சட்டம் ஒழுங்கை பேண உதவும்.(குழம்பி வருகிறது)
25 – 26 விலக்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான இதன் மூலம் விதியை மீறியதால் பாவப்பரிமாற்றங்கள் நடந்தேறின என்பது குறிப்பிட்ட ஓர் மதத்தின் நம்பிக்கையாக உள்ளது. (வலமிருந்து இடம்)
26 – 27 மனிதனின் படைப்புத்திறன் என்றும் கூறலாம்.
31 – 35 சிலருக்கு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உண்டாக இதுவும் ஏதுவாகிறது (குழம்பி வருகிறது)
மேலிருந்து கீழ்
1 – 19 பதினாறு வகைப்படும் இது பொழுதுகளுக்கும் இன்ப துன்பங்களுக்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது.
8 – 32 இறைவனுக்கு மட்டுமல்ல தாய்மை, காதல் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
27 – 33 இவை தோன்ற அடிப்படை காரணம் ஈர்ப்பு விசை என கணித்தவர் இயற்பியல் விஞ்ஞானி சேர்.ஐசாக் நியூட்டன் ( கீழிருந்து மேல்)
22 – 34 அலங்காரத்திற்கானது மட்டுமல்ல மருத்துவ பயன்களும் இதன் மூலம் உண்டு என்பது முன்னோர்களின் கூற்று.
11 – 35 சீரான போக்கின் பாதிப்பு (குழம்பி வருகிறது)
18 – 36 இலக்கிய சுவையிலும் நாட்டிய வகையிலும் கூட அறியப்படுவது
உங்களது விடைகளை trttamil@hotmail.fr என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் வியாழக்கிழமைக்கு (22/11/2018) முன்னர் அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி