Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 291 (09/05/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 291 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள்  09, 29

இடமிருந்து வலம்

01 – 06 ஒரு விடயத்துக்கான மேன்மையைக் குறிக்கும்

14 – 17 கூத்திலிருந்தே தோற்றம் பெற்றது

20 – 23 அதீதமானாலும் ஆபத்தை ஏற்படுத்தும் (குழம்பி வருகிறது)

25 – 27 பெண்களின் குண இயல்புகளை அறிய உதவுவதாக சிலரின் நம்பிக்கை (குழம்பி வருகிறது)

31 – 32 தனித்துப் பொருள் தராத சொல்

33 – 36 எச்சரிக்கைக்குரியதாகவும் நோக்கப்படுகிறது

மேலிருந்து கீழ்

01 – 25 தன்னிலை மறத்தல்

02 – 20 எல்லை கடந்தது

20 – 26 அனைத்து பண்டைய நாகரீகங்களிலும் இடம் பிடித்தவற்றுள் ஒன்று

26 – 32 மதங்களின் அடிப்படையில் வழக்கு வேறுபடும்

04 – 28 தகுதிக்கானது (கீழிருந்து மேல்)

11 – 23 சூரிய சந்திர சுழற்சி முறையைக்கொண்டும் கணிக்கப்படுவது (குழம்பி வருகிறது)

06 – 18 சிலரின் வீண் தர்க்கத்தையும் குறிப்பிடலாம் (குழம்பி வருகிறது)

18 – 36 தெய்வீகம் (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி 291 (09.05.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 290 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.சித்ரா பவன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 290ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அவதாரம்

10 – 12 தூரம்

13 – 15 வம்பு

16 – 17 விதி

20 – 23 சிரிப்பு

26 – 28 பிறவி

32 – 36 சித்திரம்

மேலிருந்து கீழ்

01 – 19 அடாவடி

25 – 31 கசை

02 – 20 வரம்பு

15 – 33 சிறப்பு

16 – 22 திரி

23 – 29 சிறை

06 – 18 ஈரம்

18 – 36 நிம்மதி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 290 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 290 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!