Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 288 (18/04/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 288 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 06 தனக்கென குறிக்கப்பட்ட சுயதகுதி
08 – 12 சித்திரை மாதத்திற்குமுரியதாக கருதப்படும்
17 – 18 இணையுடன் இணைந்தால் இணையற்றது
25 – 29 கள்ளங்கபடமற்ற தன்மை
31 – 33 இசைக்கட்டமைப்புக்கு தொடர்பு உண்டு
33 – 35 குறிக்கப்பட்ட விடயத்தின் தீர்வுக்கான ஒருங்கிணைப்பு (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 இதன் அளவு உடலில் குறையும் போது இதயக்கோளாறுகளும் ஏற்படும்
08 – 20 நற்பேறு
09 – 21 மூச்சுப்பயிற்சிக்கான கலை எனவும் பொருள் தரும்
04 – 22 சொந்தங்களுக்கானது அல்லாமல் அறிமுகம் இல்லாதவருக்கானது என்பதே உண்மையில் இதன் பொருள் (கீழிருந்து மேல்)
23 – 29 சிறப்புக்குரியது (இதற்கான விடை பாடலில் வரும் ஒரு சொல்லின் முதற்பகுதி) கீழிருந்து மேல்
18 – 30 ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் குலச்சின்னங்களே இடப்பட்டன (கீழிருந்து மேல்)
30 – 36 கவிஞர்களின் கற்பனையில் அழகு

TRT தமிழ் ஒலி · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி -288 (18.04.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 287 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 287 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 மர்மம்
07 – 10 உயர்வு
10 – 12 வரவு
15 – 17 பரிசு
20 – 22 பதம்
25 – 29 அதிசயம்
33 – 36 மாற்றம்

மேலிருந்து கீழ்

01 – 25 மயக்கம்
20 – 32 சாயம்
10 – 22 பரிவு
06 – 12 வலை
12 – 36 பரவசம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 287 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

திரு.சந்திரசேகரம் செல்லத்துரை, நோர்வே (தயவு செய்து உங்கள் விடைகளை சரி பார்த்து கொள்ளுங்கள்.முயற்சிக்கு பாராட்டுக்கள்)

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 287 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!