Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 261 (05/07/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 261 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 07, 15, 36

இடமிருந்து வலம்

01 – 05 கலைகளுள் ஒன்றான இதற்கு சூரிய ஒளியே பயன்பட்டதாக புராணங்கள் சில கூறுகின்றன.
08 – 12 பெரும் தோல்விகளாலும் அதிக அவமானங்களாலும் கிடைப்பதாகவே பலருக்கும் அமைவது (குழம்பி வருகிறது)
20 – 22 வலைத்தளத்தின் முக்கிய பயன்பாடென கருதலாம் (குழம்பி வருகிறது)
26 – 27 உடலும் உள்ளமும் எதிர் கொள்ளக்கூடியது
32 – 33 மனிதர்களின் பேச்சும் மொழியும் உருவாக காரணமான உடற்கூறு

மேலிருந்து கீழ்

13 – 31 தாவரம் விலங்கு மனிதன் இவற்றின் உணவுப் பிணைப்பும் இவ்வாறு அழைக்கப்படும்
08 – 20 நாட்டுக்கானாலும் வீட்டுக்கானாலும் நட்பு அவசியம் பேணப்படல் நலம்
20 – 32 பல்வேறு துறைகள் இருப்பினும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கான இதன் செயற்பாடு பல்வேறு நாடுகளிலும் விமர்சனத்திற்குள்ளாகின்றது (கீழிருந்து மேல்)
04 – 22மனித உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் இவ்வாறு குறிப்பிடுவதுண்டு (குழம்பி வருகிறது)
22 – 34 எமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் குறித்து நிற்கும் சிலவற்றுள் இது முக்கிய இடத்தை பெறுகிறது (குழம்பி வருகிறது)
05 – 23 மெலிதான ஓசை எனவும் பொருள் தரும் (கீழிருந்து மேல்)
23 – 35 மூலிகைகள் நீரில் கலப்பதால் இதன் உபயோகத்தால் சில நோய்கள் குணமடைவதாகவும் கூறப்படுகிறது
06 – 30 விஞ்ஞான கருவிகள் மட்டுமல்ல சில உயிரினங்களும் முற்கூட்டியே இதனை கண்டறியும் (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப்போட்டி 261 Ok (05.07.20)

வானொலிக்குறுக்கெழுத்துப்போட்டி இல 260 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ் .
திருமதி கமலவேணி நவரட்ணராஜா அவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 260 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 குயில் பாட்டு
08 – 12 அழுத்தம்
15 – 18 உலகம்
19 – 22 சாம்பல்
22 – 24 தோல்வி
28 – 29 பனி
31 – 35 புத்தகம்

மேலிருந்து கீழ்

07 – 19 சாயம்
19 – 31 சார்பு
08 – 26 அம்புலி
16 – 28 பகல்
06 – 18 உதடு
24 – 36 பிறவி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 260ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 260ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!