Day: July 5, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 261 (05/07/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இராணுவத்துடன் வருகை தந்த பிக்கு நிலத்தை அபகரிக்க முயற்சி? – தமிழ் மக்கள் சந்தேகம்
மட்டக்களப்பு- வெல்லாவெளி, வேற்றுச்சேனை பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர், பெருமளவான படையினருடன் வருகைதந்து, அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த காணி, தங்களுக்கு உரித்துடையது என அப்பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளார். வேற்றுச்சேனையில் ஒதுக்குப்புறமாகவுள்ள பகுதியொன்றினையே குறித்த பௌத்த பிக்கு, இராணுவத்தினர்மேலும் படிக்க...
வெள்ளவத்தை கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து!
கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் கடைத்தொகுதி ஒன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை, ஸ்ரேசன் வீதியை அண்மித்த பகுதியில் உள்ள புடவைக் கடைத் தொகுதியிலேயே இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள்மேலும் படிக்க...
அமெரிக்க சிறு வர்த்தகர்களுக்குப் பயனளிக்கும் சட்ட வரைபில் ட்ரம்ப் கையெழுத்து
அமெரிக்க சிறு வர்த்தகர்கள் தமக்கான நிவாரண கடன் தொகைக்காக விண்ணப்பிக்கும் இறுதி திகதியை நீடிப்பது தொடர்பான சட்ட வரைபில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (சனிக்கிழமை) கையெழுத்திட்டுள்ளார். அதனடிப்படையில், குறித்த கடனுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்மேலும் படிக்க...
அமெரிக்காவில் முப்பது இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அமெரிக்காவில் தொடர்கதையாக நீண்டுகொண்டே செல்கிறது. நாளாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் அமெரிக்காவில் தினமும் பலர் குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்து வருகின்றனர். இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் கொரோனாமேலும் படிக்க...
சீன பேட்மிண்டன் ஜாம்பவான் லின் டேன் ஓய்வு!
இரண்டு முறை ஒலிம்பிக் சம்பியனும் சீன பேட்மிண்டன் ஜாம்பவானுமாகிய லின் டேன், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான சீனாவைச் சேர்ந்த லின் டேன், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம்மேலும் படிக்க...
பிரதமரின் குடியிருப்புப் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவர் கைது!
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓட்டாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ள ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை பிக்கப் வாகனம் கொண்டு மோதிமேலும் படிக்க...
எயார் பிரான்ஸ்- ஹாப் நிறுவனத்திலுள்ள 7,580பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டம்!
எயார் பிரான்ஸ் விமான நிறுவனம் மற்றும் அதன் பிராந்திய பிரிவான ஹாப் நிறுவனத்தில் பணிபுரியும் 7,580பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக, எயார் பிரான்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடியே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள நிர்வாகம், 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள்மேலும் படிக்க...
ஜப்பானில் வெள்ளம் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்
ஜப்பானில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக ஏறக்குறைய 15 பேர் இறந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏறக்குறைய 14 பேர் வெள்ளப்பெருக்கு இடம்பெற்ற மருத்துவ மையத்தில் இருந்துமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்
கொரோனா வைரஸ் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் கிரியாக்கோஸ் மிற்சோரேக்கிஸ் ( Kyriakos Mitsotakis ) இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்மேலும் படிக்க...
முடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடிய இங்கிலாந்து மக்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் நாடளாவிய முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் முதன்முறையாக மக்கள் இரவில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இரவுப்பொழுதை இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சியாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கத்தின் போது மூடப்பட்டிருந்த பொழுதுபோக்கு மையங்களான களியாட்ட விடுதிகள், மதுபான மற்றும்மேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்தை தீவிரமாக அமுல்படுத்தும் வகையிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 இலட்சம் பொலிஸார பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்கள் முக்கியமானமேலும் படிக்க...
மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு
வவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்தார். வவுனியா றம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில்மேலும் படிக்க...
கொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஸ்யாவை இந்தியா நெருங்கியுள்ளது. அதற்கமைய இந்த கொடிய வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 74 ஆயிரத்து 312 ஆக பதிவாகியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம்மேலும் படிக்க...
மன்னார் – பேசாலை தேவாலயத்தில் நடமாடிய இனந் தெரியாத நபர்: பாதுகாப்பு தீவிரம்
மன்னார் – பேசாலையில் அமைந்துள்ள தேவாலயமொன்றுக்கு இனந்தெரியாத நபர் வந்து சென்ற விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு, பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம் உட்பட பேசாலை, தலைமன்னார் ஆகிய பகுதிகளில் இராணுவம் மற்றும்மேலும் படிக்க...
இனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர்
இனவாத சிந்தனையுடன் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை இனங்கண்டு, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரட்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...