Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 205 (16/12/2018)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 204 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 8, 30

இடமிருந்து வலம் 

01 -06 மன நலம் குன்றியோர் பராயமடையாதோர் ஈடுபட முடியாது என்பது சட்ட பூர்வமான கணிப்பு

10 – 12 ஒரு வகையில் புவியின் சுற்று வட்டப்பாதை பிரிவுகள் ஒவ்வொன்றும் இவ்வாறும் அழைக்கப்படும் (குழம்பி வருகிறது)

14 – 15 பல விதத்திலும் தமிழ் கலாச்சாரத்தோடும் இயற்கையோடும் இயைந்த பண்பாட்டு அம்சத்திற்கு உரியதாக இதனை மூதாதையர் கருதினர் (வலமிருந்து இடம்)

21 – 22 முற்காலத்தில் உடல் உழைப்பாகவும் பொருட்களாகவும் பெறப்பட்டது (வலமிருந்து இடம்)

25 – 29 அசாதாரண நிலைமைக்கு இதுவும் காரணம்

31 – 36 கட்டுப்படுத்த வேண்டியதான இது சில சந்தர்ப்பங்களில் தண்டனைக்குரிய குற்றமாகவும் அமையலாம்.

மேலிருந்து கீழ் 

01 – 13 தனிமை என்றும் பொருள் கொள்ளக்கூடியது.

19 – 31 உடலினை இயக்கக் கூடிய ஆற்றல் கொண்ட இது புறத்துடன் தொடர்பு படக்கூடிய அனைத்து செயல்களுக்கும் காரணம் (கீழிருந்து மேல்)

14 – 20 அழிவுக்குள்ளாகும் என்றாலும் இதன்படி வாழ்பவர்களுக்கு அழிவில்லை.  (கீழிருந்து மேல்)

03 – 21 குறிக்கப்பட்டவர்கள் மாத்திரம் தமக்குள் புரிந்து கொள்ளக்கூடியது (குழம்பி வருகிறது)

10 – 28 ஒளிச்சேர்க்கையின் மூலம் சுத்தமான காற்றை தரும் (குழம்பி வருகிறது)

17 – 35 சிலருக்கு ஆரம்ப அரிச்சுவடியையும் நினைவு படுத்தலாம்.(குழம்பி வருகிறது)

06 – 24 உளவியல் மற்றும் எழுத்தியல் ஊடாகவும் நிகழ்த்தலாம். (கீழிருந்து மேல்)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 204 ன் விடைகள் 

இடமிருந்து வலம்

01 – 05 முக்கோணம்
07 – 12 வரதட்சணை
13 – 15 சாயம்
20 – 23 தும்மல்
25 – 29 பொல்லாப்பு
31 – 36 எகத்தாளம்

மேலிருந்து கீழ்

07 – 25 தழும்பு
08 – 20 வயது
09 – 21 சாரல்
05 – 23 அம்சம்
06 – 18 திண்ணை
18 – 36 எதிரொலி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 204 ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள் 

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி. பேபி கணேஷ், யேர்மனி

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி

திருமதி. பிறேமா கைலாயநாதன்,  பிரான்ஸ்

திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா,  பிரான்ஸ்

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம்,  சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. விஜி பாலேந்திரா,  பிரான்ஸ்

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 204 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் ஆரம்ப நிகழ்ச்சி முதல் தற்போது வரை  இந் நிகழ்ச்சியூடாகப் பயணித்துக் கொண்டிருக்கும்  உங்கள் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!