வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 204 ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரம் : 16
இடமிருந்து வலம்
1 – 5 அத்திலாந்திக் சமுத்திரத்தின் மாயமான பகுதியை அடையாளப்படுத்த பயன்படும் சொல்
7 – 12 பெண்களுக்கெதிரான வன்முறையாகவும் தென்படுவது (குழம்பி வருகிறது, ஒலிபரப்பாகும் பாடலில் ஒத்த கருத்துள்ள சொல் வருகிறது)
13 – 15 சிலரின் சுயரூபம் வெளிப்படும் போது இதனை உ தாரணப்படுத்துவதுண்டு (வலமிருந்து இடம்)
20 – 23 உடலினுள் உட் சென்ற கிருமிகளை வெளியேற்றும் செயற்பாடு எனவும் கூறலாம் (குழம்பி வருகிறது)
25 – 29 நேர்மையான மனிதர் பலரும் விரும்பாத இது சிலருக்கு கரும்பு போன்றது (வலமிருந்து இடம்)
31 – 36 அடுத்தவரை சிறுமைப்படுத்தும் அலட்சியப்போக்கு (வலமிருந்து இடம்)
மேலிருந்து கீழ்
7 – 25 வீரத்தின் அடையாளமாகக்கூட நோக்கப்படலாம் (குழம்பி வருகிறது)
8 – 20 அரசகருமங்கள் மற்றும் சட்ட வரைமுறைகள் போன்றவற்றுக்கு அவசியமானது.
9 – 21 மழையின் அழகு அல்லது மலையின் அழகு (குழம்பி வருகிறது)
5 – 23 குறிப்பிடத்தக்க பிரிவுகளையோ பகுதியையோ மையப்படுத்தினாலும் அழகின் முழுமையையும் இவ்வாறு குறிப்பிடுவதுண்டு.
(குழம்பி வருகிறது)
6 – 18 முன்னொரு காலத்தில் இல்லங்களுக்குரிய மரபாக இருந்த இது நாகரீக வளர்ச்சியில் அருகி அல்ல, மறைந்தே போனது எனலாம்.
(குழம்பி வருகிறது)
18 – 36 இறந்தகால விடயத்தின் நிகழ்கால செயற்பாடு குறித்தும் கூறப்படுவது (குழம்பி வருகிறது)
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 203 ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 06 ஆடம்பரம்
07 – 10 நரம்பு
13 – 16 பித்தளை
19 – 23 மத்தளம்
25 – 28 சாகசம்
31 – 34 கும்பம்
மேலிருந்து கீழ்
01 – 13 ஆரபி
19 – 31 சாபம்
08 – 32 புத்தகம்
03 – 27 சம்மதம்
21 – 33 மசகு
11 – 29 பூகோளம்
06 – 36 மகரந்தம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 203 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி. பேபி கணேஷ், யேர்மனி
திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திருமதி.லாலா ரவி , பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 203 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் ஆரம்ப நிகழ்ச்சி முதல் தற்போது வரை இந் நிகழ்ச்சியூடாகப் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!