Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 219 (24/03/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 219 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 5, 14, 16, 31

இடமிருந்து வலம்

1 – 4 சோகங்களை மறைக்கும் முகமூடி

9 -10 சிலவகை உயிரினங்களின் இருப்பிடம் (வலமிருந்து இடம்)

20 – 22 திசைகளுக்கேற்றவாறு பலன் கொடுக்கும் என நம்பப்படுவது (குழம்பி வருகிறது)

25 – 27 குறிக்கப்பட்ட சூழல் நிலைமை போன்றவை வெளிப்படும் வகையிலான தோற்றம் (வலமிருந்து இடம்)

28 – 30 வரலாறு எனவும் பொருள் தரும் (வலமிருந்து இடம்)

33 – 36 போலியான பாவனை

மேலிருந்து கீழ்

1 – 25 நல்வினை அல்லது நல்வினையின் பயன்

2 – 8 மருத்துவகுணம் கொண்ட இது கலப்படத்தில் முதலிடம் வகிப்பதாக கருதப்படுவது (கீழிருந்து மேல்)

20 – 32 செயலுக்கேற்ற விளைவான இது ஜாதகப்படியானால்  நன்மை தீமை

15 – 27 வேகமான இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட இதுவும் ஏதுவாகிறது (குழம்பி வருகிறது)

4 – 10 பொதுவான அம்சங்களை அடிப்படையாக கொண்ட பிரிவு (கீழிருந்து மேல்)

11 – 23 கண்டனத்தை வெளிப்படுத்தும் முறையையும் குறிப்பிடலாம்

6 – 18 நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கும் கொழுப்பை குறைக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது (கீழிருந்து மேல்)

18 – 36 பங்குனி மாதத்தையும் குறிக்கும்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 218 ன் விடைகள் 

இடமிருந்து வலம்

01 – 06 பொழுதுபோக்கு

10 – 12 தூரிகை

13 – 15 அருவி

21 – 22 பிழை

25 – 27 வம்பு

31 – 33 கெட்டி

34 – 36 நன்மை

மேலிருந்து கீழ்

01 – 13 பொருள்

19 – 31 காவடி

03 – 15 விழுது

10 – 34 நம்பிக்கை

11 – 23 மாதிரி

06 – 30 குதூகலம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 218 ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திரு . திக்கம் நடா, சுவிஸ்

திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்

திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்

ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

ஜெயந்தி , ஜேர்மனி

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி

திருமதி. நந்தினி சண்முகநாதன், பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 218 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!