Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 344 (07/05/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 344ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் : 22

இடமிருந்து வலம்

01 – 05 நேர்மறையான இது மூடத்தனமானால் எதிர்மறைக்குரியது எனலாம்
08 – 09 பெரும்பாலும் வரலாற்றில் இடம்பிடித்த பெயர்களை தன்னகத்தே கொண்டது
09 – 11 மகளிருக்கான காதணி வகைகளுள் ஒன்று (குழம்பி வருகிறது)
14 – 17 அதிக அன்பு, நம்பிக்கையில் பாதிப்பு ஏற்படும் போது கூட தோன்றக்கூடியது
27 – 30 வேத காலத்தில் மக்களால் வழிபட்டவற்றுள் ஒன்று (குழம்பி வருகிறது)
32 – 35 இயல்பான தன்மைக்கும் பொருந்தும் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 31 ஆரம்ப கால அரசர்களால் மனதை அமைதிப்படுத்துவதற்கானதாக நோக்கப்பட்டது
14 – 26 மின்சாரத்தை எளிதில் கடத்தக்கூடியது
15 – 27 மேலை நாடுகளில் வாழும் எமது தற்கால சந்ததியினர் காண்பதற்கு அரிதான பலவற்றுள் ஒன்று (கீழிருந்து மேல்)
17 – 35 இதன் தேவை எனும் உணர்வு சில தாதுப் பொருட்களின் குறைபாட்டால் ஏற்படுவது (கீழிருந்து மேல்)
06 – 12 மிகப் பழமையான காலத்தில் உபயோகப் படுத்தப்பட்ட ஒரு வகை ஆயுதம் (கீழிருந்து மேல்)
12 – 24 மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது (குழம்பி வருகிறது)
24 – 36 அண்டம் என்பதன் பொருளாக நிகண்டு குறிப்பிடுபவற்றுள் ஒன்று (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 344

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 343ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 இரத்தம்
08 – 10 மொட்டு
11 – 12 திசை
13 – 16 கட்டளை
21 – 23 பாகம்
31 – 33 வேதம்
34 – 35 மேடு

மேலிருந்து கீழ்

01 – 31 இரகசியம்
08 – 26 தாலாட்டு
23 – 29 பாஷை
06 – 12 விதி
18 – 30 கேள்வி
30 – 36 ஆவி

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 343ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 343ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பத்மராணி இராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி.ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 343ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!