Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 210 (20/01/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 210 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 16 , 18

இடமிருந்து வலம்

01 – 05 குறைவில்லாத நிறைவு

08 – 10 அடி தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வர தொடுப்பது (குழம்பி வருகிறது)

19 – 23 நீண்டு செல்லும் தன்மை கொண்ட இது ஆர்வத்தை ஏற்படுத்தும் (குழம்பி வருகிறது)

25 – 29 பல்வேறு விதமான நோய்களில் இருந்து விடுக்கும் என நம்பப்படும் இது பெறுமதி வாய்ந்தது (வலமிருந்து இடம்)

31 – 32 பிரிவின் போது கொடுப்பதும் பெறுவதும்

33 – 35 பாவ புண்ணியங்களை பொறுத்து அமையும் என கருதப்படுவது

மேலிருந்து கீழ்

01 – 25 இதன் மூலம் எதிர் காலத்தை அறிந்து கொள்பவர்களும் உண்டு

02 – 14 நச்சுத்தன்மையும் கொண்டதெனினும் மருத்துவ பயன்பாட்டிற்கும் ஏற்றதாக கொள்ளப்படுவதுண்டு (குழம்பி வருகிறது)

09 – 21 குறிப்பிட்ட ஓர் மதத்தின் நம்பிக்கையின் படி இதனை குழுவாக மேற்கொள்வதில் அதிக பலனுண்டு (கீழிருந்து மேல்)

05 – 35 செயற்பாட்டின் மதிப்பீடு (பாடல் இல்லை, கீழிருந்து மேல்)

06 – 12 எல்லைகளை நிர்ணயிப்பதாகவும் பாதுகாப்பதற்காகவும் அமைவது

24 – 36 முகலாயர் ஆட்சியின் போது இதனால் அமைக்கப்பட்ட மசூதிகள் வரலாற்று சிறப்பு பெற்றன

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 209 ன் விடைகள் 

01 – 04 காணிக்கை

07 – 10 விருந்து

15 – 18 தாயகம்

19 – 22 தேவாரம்

25 – 28 மோட்சம்

32 – 34 நாமம்

34 – 36 நாணல்

மேலிருந்து கீழ்

01 – 19 காவியம்

14 – 20 வாகை

09 – 33 சந்தேகம்

10 – 28 துயரம்

05 – 17 புறம்

06 – 24 ஆதாரம்

24 – 36 ஆவல்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 209ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா , பிரான்ஸ்

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி

திருமதி.லாலா ரவி பிரான்ஸ்

திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம் ஜேர்மனி

திரு . திக்கம் நடா, சுவிஸ்

தயவு செய்து அன்பு நேயர்கள் உங்களது விடைகளை வியாழக்கிழமைக்கு முன்பாக அனுப்பி வையுங்கள்.ஒலிப்பதிவு நிகழ்ச்சி என்பதால் அதன் பிறகு அனுப்பி வைக்கப்படும் விடைகள் நிகழ்ச்சியில் சேர்த்து கொள்ள முடியாது என்பதை கவலையுடன் அறியத்தருகின்றோம். இணையத்தில் மட்டும் பிரசுரிக்கப்படும்.

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 209 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...