Sunday, January 20th, 2019

 

இஸ்ரேல் – சாட் நாடுகள் இராஜதந்திர உறவுகளை மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன!

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதென்யாகு மற்றும் சாட் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி ஆகியோர் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். சாட் தலைநகர் என்டிஜமேனாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய ஆபிரிக்க நாட்டின் தலைவர் என்ற ரீதியில், சாட் ஜனாதிபதி தனது முதலாவது இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயமானது கடந்த 1972 ஆம் ஆண்டளவில் இராஜதந்திர ரீதியாக இஸ்ரேலுடன் முறிந்து போன உறவை மீள புதுப்பிக்கும் வகையில் அமைந்தது. எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய இரண்டு நாடுகளுடன் மாத்திரம் நெருங்கிய ராஜதந்திர உறவுகளை கொண்டுள்ளது. அதேவேளை, பிரதமர் நெதன்யாகு வளைகுடா நாடுகளுடன் சற்று காரசாரமான கொள்கையுடன் செயற்படுவதாக சூசகமாகமேலும் படிக்க…


ராஜூவ்காந்தி கொலை விவகாரம்: 2ஆவது நாளாகவும் முருகன் உண்ணாவிரத போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், தன்னை விடுதலை செய்யக்கோரி 2 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) ஈடுபட்டுள்ளார். குறித்த உண்ணாவிரத போராட்டத்தை நேற்று பிற்பகல் முதல் முருகன் தொடங்கினார். முருகனின் போராட்டம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, “தன்னை விடுதலை செய்யக்கோரியே, முருகன் இந்த உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்மெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் சிறை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்” என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை முருகன், வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தனது மனைவி நளினியை, முருகன் நேற்று சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுக்கின்றது – முதலமைச்சர் குற்றச்சாட்டு

அரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை பள்ளிகுடியில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகக் கட்சி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் தம் மக்களைப் பற்றியே சிந்திப்பார்கள். ஆனால் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடியது எமது கட்சியே. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் விவசாயிகளின் பிரச்சினைகள் என்னவென்பது எனக்குத் தெரியும். மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கியதை தி.மு.க. குறை கூறியது. இதனை ஒரு வழக்குப்போட்டு தடுத்து நிறுத்தவும் பார்த்தார்கள். எனவே ஏழைகளுக்கு கொடுக்கும் சேவைகளை தடுக்கின்ற கட்சியாக தி.மு.க கட்சியே உள்ளது” என்று தெரிவித்தார்.


ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் – அசாத் சாலி

புதிய அரசியலமைப்பு குறித்து ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொறுப்புக்கூறல் விடயத்திற்கு மேலதிகமாக, புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை இணைத்து அதற்கான சர்வதேச மேற்பார்வை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜெனீவா அமர்வில் கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா அமர்வு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆதவன் செய்திப்பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிக்கும் விடயங்களை குறுகிய காலத்தில் செய்வதற்கான பொறிமுறையையும் கேட்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஏற்கனவே நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், வரும் வாரமும் கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறினார். விரைவில் ஜெனிவாகுக்குச் சென்று ஏனைய உறுப்பு நாடுகளுடனும் பேசவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


புதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை – கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பு குறித்து ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொறுப்புக்கூறல் விடயத்திற்கு மேலதிகமாக, புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை இணைத்து அதற்கான சர்வதேச மேற்பார்வை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜெனீவா அமர்வில் கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா அமர்வு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆதவன் செய்திப்பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிக்கும் விடயங்களை குறுகிய காலத்தில் செய்வதற்கான பொறிமுறையையும் கேட்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஏற்கனவே நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், வரும் வாரமும் கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறினார். விரைவில் ஜெனிவாகுக்குச் சென்று ஏனைய உறுப்பு நாடுகளுடனும் பேசவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணமில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை என தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண மத்திய குழுக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமக்கு எந்தவொரு கட்சியையும் பிளவு படச்செய்வதற்கு விருப்பமில்லை. ஈ.பி.ஆர்.எல்.எஃப், கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள். எனவே எந்த விதத்திலும் இப்போது இருக்கின்ற கூட்டமைப்பை பிளவுபடுத்தவில்லை. அதேபோல் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் அவசியமும் எமக்கில்லை. இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சித்தார்த்தனின் கட்சி அங்கிருந்துகொண்டு எங்களுடன் இணைவதை ஏற்கவில்லை. அவர் கொள்கை ரீதியாக இணைந்து செயற்பட்டாலும் கட்சி ரீதியாக இணையவேண்டிய அவசியம் அவருக்கும் இல்லை, எங்களுக்கும் இல்லை. நாம் எமது கட்சியில்மேலும் படிக்க…


புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது – அமைச்சர் மனோ கணேசன்

புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும் இந்த எதிர்ப்பு வலுக்கிறது. இதற்கு அவர்கள் காலம் கடந்து விட்டது, இது தேர்தல் ஆண்டு என்ற காரணங்களை காட்டுகிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, புதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை தொடங்கிய ஆரம்பத்தில், வழிநடத்தல் குழு, ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம், அரசியல் தீர்வு ஆகிய மூன்று பிரதான இலக்குகளை தீர்மானித்தது. காலப்போக்கில் முதலிரண்டை மட்டும் தீவிரமாக செய்ய முயன்று, அரசியல் தீர்வை தள்ளி வைக்க முயன்றார்கள். ஜேவிபியை திருப்தி படுத்த முதலாவதுமேலும் படிக்க…


பொலிவியாவில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்காவிலுள்ள பொலிவியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸிலிருந்து சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சல்லபட்டா நகரத்தில், இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சல்லபட்டா மேயர் தெரிவித்துள்ளார்.


மெக்ஸிக்கோ எரிபொருள் குழாய் வெடிப்புச் சம்பவம்: உயிரிழப்பு 73ஆக அதிகரிப்பு

மத்திய மெக்ஸிக்கோவில் நிலத்திற்கு அடியில் எரிபொருளை கொண்டுசெல்லும் குழாய்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. குழாய்களின் ஊடாக செல்லும் எரிபொருளை சிலர் திருடி கொள்கலன்களில் நிரப்புவதற்கு முயற்சித்தபோது, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த 70இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும், இறந்தவர்கள் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளமையால், சடலங்களை அடையாளம் காண்பதில் அவர்களது உறவினர்களுக்கு பாரிய சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளவர்கள், தமது உறவுகளை எப்படியாவது கண்டுபிடித்துத் தருமாறு அவர்களது ஒளிப்படங்களை ஏந்தியவாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்னும் சிலர் மரபணு பரிசோதனைமேலும் படிக்க…


மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை சினிமா ஏற்படுத்துகிறது: மோடி

இந்திய சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை சினிமா ஏற்படுத்தி வருகிறதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மும்பையில், இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நேற்று (சனிக்கிழமை) திறந்து வைத்த மோடி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “திரைப்படங்களும், சமுதாயமும் ஒன்றையொன்று பிரதிபலிக்கின்றது. மேலும் நாட்டில் இலட்சக்கணக்கான பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் அதற்கு கோடிக்கணக்கான தீர்வுகளும் உள்ளன என்பதை சினிமா வெளிப்படுத்துகின்றது. அத்துடன் சமுதாயத்திலும் சினிமா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இந்தியாவில் வெளியாகும் சினிமா படங்கள், திருட்டு இருவெட்டுகளில் இணையத்திலும் வெளியிடப்படுகின்றன. இவைகளை தடுப்பதற்கு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை சுற்றுலா வளர்ச்சிக்கும் சினிமா பெரிதும் உதவுகிறது. இதனால் இந்தியாவில் உலக சினிமா மாநாடு நடத்தப்பட வேண்டும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் ஒளவையார் நினைவு தினம் அனுஸ்டிப்பு

வவுனியா- சின்னப்புதுக்குளம் பகுதியில் ஒளவையார் நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது இதன்போது ஒளவையாரின் நினைவுப் பேருரையை வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் நிறைமதி நிகழ்த்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒளவையாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குறித்த நிகழ்வில் நகரசபையின் உப நகரபிதா சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், சு.கண்டீபன், சமந்தா செபநேசராணி, பாஸ்கரன் ஜெயவதனி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சுந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர் விக்னா, நகரசபை ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சியில் ஆயுதங்களுடன் இளைஞன் கைது

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் பளை, கரந்தாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய (சனிக்கிழமை) தினம் அவ்வீட்டினை அவர்கள் சோதனையிட்டனர். இதன்போது, ஒரு தொகுதி ஆயுதங்களை அவர்கள் மீட்டதுடன் வீட்டிலிருந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவ்வாறு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கொண்டு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கொங்கோவில் அதிகார மாற்றம்: நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!

கொங்கோ ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றிபெற்றுள்ளார். அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மற்றுமொரு எதிர்க்கட்சி வேட்பாளரான மார்டின் ஃபயூலு தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த அரசியலமைப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பாரிய வன்முறைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற கொங்கோ ஜனநாயக குடியரசின் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஃபெலிக்ஸ் வெற்றிபெற்றதாக கடந்த வாரம் கொங்கோ தேர்தல் ஆணையகம் அறிவித்தது. எனினும், தற்போதைய ஜனாதிபதி கபிலாவுடன் ஃபெலிக்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளார் என அரச நிர்வாக எதிர்ப்பாளரான மார்டின் ஃபயூலு குற்றஞ்சாட்டினார். தாமே வெற்றிபெற்றதாக அறிவித்த ஃபயூலு, அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றில் கடந்த வாரம் வழக்குத் தாக்கல் செய்தார். இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஷிசேகெடியே வெற்றிபெற்றுள்ளார் என அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 1960ஆம் ஆண்டில் பெல்ஜியத்திடமிருந்து சுதந்திரம்மேலும் படிக்க…


பா.ஜ.க தமிழகத்தில் நிச்சயம் கால் பதிக்கும்: தமிழிசை

தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி நிச்சயமாக வேரூன்றுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். நெல்லையில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடத்தில் கருத்து வெளியிட்டபோதே தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வங்கிகளிலும் 15 இலட்சம் இந்திய ரூபாயை சேமித்து வைப்பேன் என பிரதமர் மோடி கூறியதாக சில கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஆனால், வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் மட்டுமின்றி உள்நாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணங்களை மீட்டால் அது ஒரு குடும்பத்துக்கு 15 இலட்சம் திட்டங்கள் தோற்றம் பெறுவதற்கு வழிவகுக்குமென்றே மோடி கூறினார். மேலும் 5 இலட்சம் திட்டம் மருத்துவ காப்பீடாக தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அந்தவகையில் தமிழகத்துக்கே அதிகளவான திட்டங்களை மத்திய அரசு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. ஆகையால் பா.ஜ.க தமிழகத்தில் கால் பதிப்பது உறுதி”மேலும் படிக்க…


காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்: அசாதுதின் ஓவைசி

இந்தியாவின் ஒரு அங்கமே ஜம்மு காஷ்மீராகும். ஆகையால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித்தலைவர் அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதாராபாத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அசாதுதின் ஓவைசி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “காஷ்மீர் இந்தியாவுக்கு உரிய பகுதியாகும். ஆகையால் பாகிஸ்தான் இவ்விடயத்தில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இதேவேளை காஷ்மீர் விவகாரத்தில் தனியான கொள்கையொன்று இருக்க வேண்டும். ஆனால் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும்  காஷ்மீர் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான கொள்கைகளோ, தொலைநோக்குப் பார்வைகளோ இக்கட்சிகளிடம் இல்லை. அந்தவகையில் காஷ்மீர் விவகாரத்தை ஜேம்ஸ் பாண்ட் மனோபாவத்தில் கையாளாமல் இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும்” என அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.


லசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன் – கோட்டாபய

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யாரென தனக்கு தெரியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு தனது தந்தையைக் கொலை செய்தவர் யாரென அறிய வேண்டுமானால் லசந்தவின் மகள் இலங்கைக்கு வந்து தன்னை சந்திக்க வெண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யாரென அனைவருக்கும் தெரியும். ஆனால், எவரும்  முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளியைத் தண்டிக்கத் தயாராக இல்லை. குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. எனினும் அவர்கள் பொய் கூறுகின்றனர். தனது தந்தையைக் கொலை செய்தவர் யாரென அறிய வேண்டுமானால், லசந்தவின் மகள் என்னைச்  சந்திக்க வேண்டும். என்ன நடந்தது என்றுமேலும் படிக்க…


தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்- யோகேஸ்வரன்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிகரான அதிகாரம், இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இந்த நாட்டிலே எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக போராடும் நிலை உருவாகக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ இந்த நாடு ஒரு இனத்துக்குரிய நாடு அல்ல. இந்த நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் சுயநிர்ணய உரிமையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதற்காகவே நாங்கள் அரசியல் தீர்வினைக் கோரியுள்ளோம். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகம் ஏனைய தேசிய இனங்களை அடக்க முடியாது. தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்குமாகவிருத்தால், முஸ்லிம் மக்களுக்கும் அதே அதிகாரம்மேலும் படிக்க…


அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளுக்கு மஹிந்த ஒத்துழைக்க வேண்டும் – சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர், புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளுக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “புதிய அரசியலமைப்பு குறித்த வரைபில் மாகாணங்களுக்கான நிரல் மற்றும் மத்திக்கான நிரல் இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. அதிலுள்ள விடயங்கள் குறித்து இதுவரையில் எழுதப்படவில்லை. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அதற்கான நிரல்கள் முன்மொழியப்பட்டன. அந்த முன்மொழிவுகளை இந்த புதிய அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாரகவிருக்கின்றோம்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 210 (20/01/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 210 ற்கான கேள்விகள்  அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 16 , 18 இடமிருந்து வலம் 01 – 05 குறைவில்லாத நிறைவு 08 – 10 அடி தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !