வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 209 (13/01/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 209 ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 23,29,31
இடமிருந்து வலம்
1 – 4 தவறான முறையில் அளிக்கப்பட்டால் பலன் பெற முடியாது.
7 – 10 தமிழர்களை பொறுத்தவரை முதன்மையான அறமாக கொள்ளப்படுவது.
15 – 18 தோன்றும் இடம் எனவும் பொருள் தரும் இது போற்றுதலுக்குரியது (குழம்பி வருகிறது)
19 – 22 தெய்வங்களுக்கான ஆரம் என்பதால் இப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. (குழம்பி வருகிறது)
25 – 28 மனித வாழ்வின் உச்ச பட்ச இலக்காக நம்பப்படுவது
32 – 34 முற்றிலுமாக ஏமாறும் நிலை ஏற்படும் போதும் இச் சொல் பயன்படுத்தப்படுவதுண்டு (குழம்பி வருகிறது)
34 – 36 வினையானால், வெட்கமடைதல்
மேலிருந்து கீழ்
1 – 19 தொடக்கம் இறைவணக்கமாக அமைவதே இதன் இலட்சணம்
14 – 20 சங்க இலக்கியங்களின் வெற்றிக்குரிய மலர் ( கீழிருந்து மேல்)
9 – 33 அறுதியிட்டு கூற முடியாத அல்லது தெளிவில்லாத நிலையாகவும் நோக்கலாம் ( குழம்பி வருகிறது)
10 – 28 மனிதனின் அடிப்படை உணர்வுகளுள் ஒன்றான இது இழப்புகளில் உண்டாகும்
5 – 17 ஒரு வகையில் அவதூறு எனவும் கருதலாம்.
6 – 24 தாங்கி நிற்பதான இது ஆரம்ப இடத்தின் மூலம் (கீழிருந்து மேல்)
24 – 36 எதிர்பார்ப்பின் தூண்டுதல்
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 208 ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 06 புதுக்கவிதை
09 – 10 பிறை
13 – 16 சிற்பம்
20 – 22 தடம்
23 – 24 இலை
31 – 36 நிரந்தரம்
மேலிருந்து கீழ்
01 – 13 புலம்
19 – 31 நிஜம்
08 – 26 சாம்பல்
15 – 33 சிந்தனை
05 – 11 விதி
06 – 12 போதை
24 – 36 இனம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 208ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன் ,நோர்வே
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா , பிரான்ஸ்