Sunday, January 13th, 2019

 

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 209 (13/01/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 209 ற்கான கேள்விகள்  அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 23,29,31 இடமிருந்து வலம் 1 – 4 தவறான முறையில் அளிக்கப்பட்டால் பலன் பெற முடியாது. 7 – 10 தமிழர்களை பொறுத்தவரை முதன்மையானமேலும் படிக்க…


காங்கிரஸ் 80 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்: குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுமென அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காதது குறித்து குலாம் நபி ஆசாத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே குலாம் நபி ஆசாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உத்தர பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப்போட்டியிடும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பா.ஜ.க.வை வீழ்த்தும். நாங்கள் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்தோ, அதில் காங்கிரஸ் சேர்க்கப்படாதது குறித்தோ உடனடியாக கருத்து கூற இயலாது. மத்திய மற்றும் கிழக்கு உத்தரபிரதேச பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளோம். கூட்டணிக்குமேலும் படிக்க…


வெளியுறவுக் கொள்கையில் இராஜ தந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்: திலக் மாரப்பன

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இராஜதந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு தூதுவர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இராஜதந்திர நடவடிக்கைகளை பயன்மிக்கதாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்குமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் உலக நாடுகளுக்கு இலங்கையை அறிமுகம் செய்யும் புதிய திட்டங்களையும் முன்னெடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பௌத்தம், தேயிலை மற்றும் வாசனைத் திரவியங்கள், மாணிக்கக்கல் என்பவற்றுக்கு புகழ்பெற்ற இடம் இலங்கை என்பதை உலகிற்கு அறிமுகம் செய்யுமாறும் அவர் தூதுவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். குறித்த செயற்பாடுகளின்போது நவீன தொடர்பாடல் முறைகளையும், சமூக வலைத்தளங்களையும் உள்ளடக்கியதான செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டுமென வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


வரவு செலவு திட்ட யோசனையின் போது கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்க வேண்டும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

எதிர்வரும் வரவு செலவு திட்ட யோசனையின் போது கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஈ.பி.ஆர்.எப் கட்சியின் கிளிநொச்சி கிளையினரின் நிர்வாக தெரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “வரவிருக்கின்ற வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்து அவற்றினை நிறைவேற்றுவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதன் பின்னரே அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் காணிப்பிரச்சனைகள் போன்ற விடயங்களுக்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இந்தமுறையும் கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியைத் தவற விடுவார்களாயின் எக்காலத்திலும் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் எதையுமேமேலும் படிக்க…


கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்: கருணா!

தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி, நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நான்கு வருட ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு ஏற்படவில்லை. தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளனர். தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று தமிழ் மக்களுக்கு சேவையாற்றவேண்டும். மேலும் தற்போது அரசாங்கத்தில் ஏற்றப்பட்ட மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையினையும் ஏற்படுத்தப்போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் போட்டிகள், பொறமைகள்மேலும் படிக்க…


மக்களை காக்க உயிர் நீத்த இரு தீயணைப்பு வீரர்கள்!

நேற்றைய தினத்தை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை காக்க் இரு தீயணைப்பு வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். மொத்தமாக 200 தீயணைப்பு படையினரும், 100 காவல்துறையினரும் களத்தில் போராடினார்கள். இவர்களில் Nathanaël Josselin எனும் 27 வயது வீரரும், Simon Cartannaz எனும் 28 வயது வீரரும் பலியாகியிருந்தார்கள். இவர்கள் இருவரும் Château d’Eau (10 ஆம் வட்டாரம்) இல் பணியாற்றும் தீயணைப்பு படை வீரர்கள். இதில் Nathanaël Josselin எனும் 27 வயதுடைய வீரர் Entremont-le-Vieux (Savoie) நகரை சேர்ந்தவர் எனவும், 4 வயது மகனின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து பணிபுரியும் இவர், மிகமேலும் படிக்க…


நாடு முழுவதும் 84,000 மஞ்சள் மேலங்கி போராளிகள்!

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஒன்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 84,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் முடிவில் பரிசுக்குள் 8,000 பேரும், Bourges நகரில் 6,700 பேரும், Toulouse நகரில் 5,500 பேரும், Bordeaux நகரில் 4,500 பேரும் கூடியிருந்தார்கள். நாடு முழுவதும் மொத்தமாக 84,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களை காட்டிலும் இது கணிசமான அதிகரிப்பாகும். கடந்த வாரத்தில் நாடு முழுவதும் 50,000 பேர் கூடியிருந்தனர். புதுவருட முதன் நாள் இரவில் 32,000 பேர் கூடியிருந்தார்கள். அதேவேளை, பரிசில் ஆங்காங்கே வன்முறைகள் வெடித்தது. 45 பேர்வரை கைது செய்யப்பட்டிருந்தனர். Bourges நகரிலும் பல வன்முறைகள் வெடித்திருந்தது. ஏனைய நகரங்களில் ஓரளவு அமைதியாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உள்துறை அமைச்சகம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சந்திரிகா கடிதம்….!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2015 ஜனவரி 8 ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குமாறு ஜனாதிபதியை முன்னாள் ஜனாதிபதி அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை தான் ஆதரிக்கவில்லை எனவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். 2005 முதல் 2015 முதல் இந்த நாட்டில் காணப்பட்ட இலஞ்சம் ஊழல் மற்றும் வன்முறைகளின் அளவை நான் இன்னமும் மறக்கவில்லை,ஜனவரி 2015யில் மிகதீவிரமாக இடம்பெற்ற தேர்தல் மோதலில் மக்கள் அந்த குழுவினரை நிராகரித்ததை நான் மறந்துவிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் ஒரு கைக்கூலி: கடுமையாக விமர்சித்த தமிழக திருநங்கை!

மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற உடனேயே திருநங்கை அப்சரா ரெட்டி நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா அதிமுக-வில் இருந்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். இதையடுத்து அவரை தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவித்தது காங்கிரஸ். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்சரா, தமிழக மக்கள் என்றும் ஹிந்தி கட்சியை ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க அரசு வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது. ரஜினிகாந்த் பா.ஜ.கவின் கைக்கூலியாக தான் செயல்படுகிறார். அரசியலுக்கு வருவேன், வருவேன் என ஏமாற்றுகிறார். மக்களை அவர் ஏமாற்றக்கூடாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.


சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது- 21 தொழிலாளர்கள் பலி!

சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 21 பேர் பலியாகினர். 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. சீனாவில் செயல்படும் நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் கடும் பனிப்புயல்- 1,431 விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எனவே 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பனி மழை போன்று கொட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பாதி அளவு பகுதி வெள்ளை போர்வையால் போர்த்தியது போன்று காட்சி அளிக்கின்றன. தெற்கு டென்வரில் உள்ள சாங்ரீ டி கிறிஸ்டோ மலைப் பகுதியில் 45 செ.மீ. அளவுக்கு பனி உறைந்து கிடக்கிறது. மேற்கு மிசோரி மற்றும் செயிண்ட் லூயிஸ் பகுதியில் 41 செ.மீ. அளவுக்கு பனிமேலும் படிக்க…


ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் மீது திடீர் தாக்குதல்- 6 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் போலீசார் நடத்திய பதிலடியில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் ஹீரத் மாகாணம், புலே ரங்கினா பகுதியில் உள்ள காவல் நிலைய வளாகத்தினுள் நேற்று இரவு 3 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். காரில் வந்து இறங்கிய அவர்கள், காவல் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் புகார் கொடுக்க வந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பயந்து போன மக்கள் சிதறி ஓடினர். பயங்கரவாதிகளை நோக்கி சில போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக காவல் நிலைய வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் 3 போலீஸ்காரர்கள், பொதுமக்கள் 2 பேர் மற்றும் ஒரு பயங்கரவாதி என 6 பேர் உயிரிழந்தனர். 3 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். காவல் நிலையத்திற்குள் நுழைய முடியாமல்மேலும் படிக்க…


நிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு ஆலைகளுக்கு தீ வைத்த விவசாயிகள்

மகாராஷ்டிராவில் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சதாரா, சங்லி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் தொடர்ந்து காலம் கடத்தி உள்ளன. இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நிலுவைத் தொகை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சதாரா மாவட்டம் கராத் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை முன்பு திரண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், ஆலையின் அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இதில் சில முக்கியமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் பர்னிச்சர்கள் கருகின. இதேபோல் நேற்று காலை, சங்லி மாவட்டம் வால்வா பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையைமேலும் படிக்க…


கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம்  பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி  இளையராஜா. அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே  அவரது  பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர்  கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன்  அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள்  கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன்  அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும்  மாணவிகள் தங்கள்  விருப்பத்தை வெளியிட்டிருந்தனர். இது இசைஞானி இளையராஜாவின் எண்ணத்தில் அலையடித்திருக்கிறது. அதன் விளைவாக இப்போது இரண்டுமேலும் படிக்க…


அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், நிறுத்தப்பட வேண்டும்…

வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது பௌத்தத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமானது எனவும் இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்களை, மகாநாயக்கர்களின் ஆசியுடன் கண்டுபிடிக்க முடியும் என நிச்சயம் நம்புவதாகவும் ஒரு தமிழனாக மாத்திரம் இதையிட்டு கவலை கொள்ளவில்லை எனவும் ஒரு ஆளுனராக, பௌத்த தத்துவத்தை மதிக்கின்ற ஒருவராகவும், இது சரியானது அல்ல என தான் நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்ப் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் அரசியல்மேலும் படிக்க…


நாமல் ராஜபக்ச குழுவினர் இன்று கிளிநொச்சி சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். அத்துடன் பா ம உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, அங்கயன் இராமநாதன் உள்ளிட்டோர் பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டடங்களிற்கு புதிய வர்ண பூச்சுக்களையும் மேற்கொண்டனர். இதேவேளை அங்கு வருகை தந்த நாமல் ராஜபக்ச ஆகியோரை சிறார்கள் வரவேற்ற நிலையில் வெள்ளம், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறார்களுடன் விளையாட்டு, சினேகபூர்வ செயற்பாடுகள் ஊடாக உள ரீதியான செயற் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றம் மாணவர்களிற்கு உதவிகளும் இன்று மாலை 3 மணியளவில் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பா.ம உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில் கிளிநாச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள முறிப்பு பிரதேசத்தில் இடம்பெற்றது. தேசிய வீடமைப்புக்கான அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பகுதியில் 11 வீடுகள் மற்றும் 15 வீடுகளை கொண்ட இரு மாதிரி வீட்டு திட்டங்களை அமைக்கும் வகையில் குறித்த வீடுகளிற்கான அடிக்கல நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக திட்டப்பணிப்பாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – தம்மதஸ்ஸி தேரர்

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை என அஸ்கிர பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மாத்திரம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டுவருவது போதுமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாகாண சபை அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது மிகவும் சிறந்தது என அவர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல் பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.


ஆர்யா – சாயிஷா விரைவில் திருமணம்?

நடிகர் ஆர்யாவை பொறுத்தவரை அவருடன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளுடன் கிசுகிசு வருவது வழக்கமான ஒன்று. பூஜா, எமி ஜாக்சன், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என பல கதாநாயகிகளுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். உடன் நடிக்கும் நடிகைகளுக்கு அவர் பிரியாணி விருந்து கொடுத்து அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது வழக்கம் என்பார்கள். இதுவரை வந்த பல கிசுகிசுக்கள் எவ்வளவு வேகமாக பரவியதோ அவ்வளவு வேகமாக பொய் ஆகியது. ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும்படி நண்பர்களும் குடும்பத்திலும் வற்புறுத்துகின்றனர். ஆனால் பொருத்தமான பெண் கிடைக்காமல் தவித்து வந்தார் ஆர்யா. இதனால் மணப்பெண்ணை தேர்வு செய்ய நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் அவருக்கு பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் சாயிஷா. இருவரும் ஜோடியாக நடித்தது முதல் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டனர். தினமும் செல்போனில் மணிக் கணக்கில் பேசுவதுடன்,மேலும் படிக்க…


உலக வங்கியின் புதிய தலைவராக இவங்கா ட்ரம்ப் நியமனம்?

உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகளான இவங்கா ட்ரம்ப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்கமைய அவர் எதிர்வரும் 31ஆம் திகதி தமது பதவிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகவுள்ளார். இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவங்கா ட்ரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், “குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தலைவர் பதவிக்காக பரிந்துரைகள் வந்துள்ளன. தகுந்த நபரைத் தெரிவுசெய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம்“ என தெரிவித்துள்ளார். இரண்டாவது உலகப்போரின் நிறைவில் ஆரம்பிக்கப்பட்ட உலக வங்கியில், அதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவேமேலும் படிக்க…


தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் -சிறிநேசன்

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய சூழலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டானில், வீடமைப்பு, நிர்மாணத்துறை, கலாசார அபிவிருத்திகள் அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு உடன்பாட்டுடன் இந்த நிபுணத்துவ அறிக்கையை கொண்டுவந்துள்ளது. அதன் மூலமாக இந்த நாட்டில் சகல மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டும், எங்களுக்கு காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் கிடைக்க வேண்டும், எங்களுடையமேலும் படிக்க…


இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 20இல் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது!

ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பேரவையின் நிகழ்ச்சி நிரல் வரைவு கடந்தவாரம் தயாரிக்கப்பட்ட போது, மார்ச் 20 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல்மேலும் படிக்க…


பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது! – ஸ்பெயின் நாட்டு பெண்மணியும் பலி!

இன்று காலை பரிசில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. தனது கணவருடன் விடுமுறைக்கு பரிசுக்கு வருகை தந்திருந்த  ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவரே இந்த எரிவாயு வெடிப்பில் சிக்குண்டு பலியாகியுள்ளார். விபத்தில் சிக்குண்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த பெண் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்பெயின் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்தில் மொத்தமாக 37 பேர் காயமடைந்திருந்தனர். அவர்களில் 10 பேர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சைக்குட்படுத்தபப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாயாவதியே அடுத்த பிரதமர் – அகிலேஷ் யாதவ்

மாயாவதியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் வழக்கம்போல் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவராக மயாவதியை முன்மொழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோவில் இன்று (சனிக்கிழமை) கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். இதன்போது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக அறிவித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அகிலேஷ் யாதவ், “எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் இரு கட்சிகளுமே சமமான பலத்துடன் போட்டியிடும். இரு கட்சிகளின் தலைமைக்கும் சமமான மரியாதை அளிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். பிரதமர் வேட்பாளராக எனது விருப்பத்தை கேட்கிறீர்கள். கடந்த காலங்களில்மேலும் படிக்க…


இலங்கையின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கை நீர்நிலை சங்கத்தின் (SLASU – Sri Lankan Aquatic Sports Union) நிர்வாகத்தில் நிலவி வருகின்ற சிக்கல்கள் காரணமாக சர்வதேச நீர்நிலை சம்மேளனத்தினால் இலங்கையின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக 3ஆவது தெற்காசிய நீர்நிலை சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இருந்த 111 இலங்கை வீரர்களின் அனுமதியை இடைநிறுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3ஆவது தெற்காசிய நீர்நிலை சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இந்தியாவின் பெங்களூர் நகரில் நடைபெறவுள்ளது. நீச்சல், மத்திய மற்றும் நீண்ட தூர நீச்சல் போட்டிகள், முக்குளித்தல் மற்றும் நீர்நிலை பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளுக்காக இம்முறை இலங்கையிலிருந்து 111 பேர் கொண்ட வீரர்கள் குழாம் இந்தியா செல்வதற்கு தயார் நிலையில் இருந்தனர். எனினும், இலங்கை நீர்நிலை சங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் மற்றும் முரண்பாடுகள்மேலும் படிக்க…


மீண்டும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஸ்மித்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முழங்கை உபாதைக்குள்ளாகியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இதற்கிடையில், ஸ்மித்தின் வலது கை முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவர் அவுஸ்திரேலியா சென்று, பரிசோதனைகளை மேற்கொண்டார். இந்த பரிசோதனைகளின் படி ஸ்மித்தின் முழங்கை தசைநார் பகுதியில் கடுமையான உபாதை ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ஸ்மித்தின் உபாதையை குணமாக்குவதற்கு, அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த சத்திர சிகிச்சையின் பின்னர், அவர் ஆறு வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த உபாதையானது, ஸ்டீவ் ஸ்மித் ஒருவருட தடைக்கு பின்னர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த வருடம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கேப்டவுனில்மேலும் படிக்க…


மாசிடோனியாவின் பெயரை மாற்ற அனுமதி!

மாசிடோனியாவின் பெயரை மாற்றும் தீர்மானத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாசிடோனியக் குடியரசு என நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பெயர் மாற்றமடைவதனூடாக 27 ஆண்டுகளாக கிரேக்கத்திற்கும் மாசிடோனியாவிற்கும் இடையில் நிலவிய பிணக்கு முடிவடையவுள்ளது. கிரேக்கத்தில் மாசிடோனியா என்ற பெயருடைய பிராந்தியம் ஒன்று காணப்படுவதால், இந்த பிணக்கு உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் இருபது நாட்களுக்கு மேலாக அரசு பணி முடக்கம்

அமெரிக்காவில் இருபது நாட்களுக்கு மேலாக அரசு பணி முடக்கம் தொடர்கின்றது. இதனால் சுமார் எட்டு இலட்சம் அரச பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு பணி முடக்கத்தை சீர் செய்ய ட்ரம்புக்கும், குடியரசுக் கட்சி தலைவர்களுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்தைகள் இடம்பெற்றன. எனினும் இந்த கலந்துரையாடலில் இருந்து டிரம்ப் வெளிநடப்பு செய்த நிலையில், பேச்சுவார்தை எந்தவித இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்தது. இதன் காரணமாக அமெரிக்காவில் அரசு பணி முடக்கம் 22 ஆவது நாளை கடந்தும் தொடர்கின்றது. இதுவே அமெரிக்க வரலாற்றில் அரச பணிகள் முடங்கிய அதிகூடிய நாட்களாக கருதப்படுகின்றது. இதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிள் கிலிண்டனின் ஆட்சி காலத்தில் 22 நாட்களுக்கு அரச பணிகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுமாறு கோரிக்கை!

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல் உறுப்பினர் டி.சேகரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கலுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். வீடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவதால் காற்றில் மாசு ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையை மாற்ற இரசாயனம் அல்லாத காற்றில் மாசு படாத அளவுக்கு பண்டிகை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. போகி பண்டிகையன்று தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகைக்காரணமாக விமானங்கள் தங்களது பயணங்களை செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 16 விமானங்கள் காலதாமதம் ஏற்பட்டு சென்று கொண்டுள்ளது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பழைய பிளாஸ்டிக்மேலும் படிக்க…


நாட்டைப் பிரிக்கும் எந்தவொரு அரசியலமைப்புக்கும் இடமில்லை – ஐ.ம.சு.கூ

நாட்டை பிரிக்கும் எந்தவொரு அரசியலமைப்பு வேலைத்திட்டங்களுக்கும் இடமளிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நேரங்கள் தேவையின்றி செலவழிக்கப்படுகின்றன என இக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், நாட்டை பிளவுப்படுத்துகின்றதும், வடக்கு கிழக்கை இணைக்கின்றதும் மற்றும் தீவிரவாதத்தை பலப்படுத்துவதுமான அரசியல் அமைப்புக்கு தாம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையென அவர் தெரிவித்தார். ஆனால், எதிர்கட்சியில் இருந்து கொண்டு அனைத்துக்கும், எதிராக நிற்கும் எண்ணம் தம்மிடம் இல்லை எனத் தெரிவித்த அவர், நாட்டிற்கு நன்மையானதும், நாட்டை பிளவுப்படுத்தாததும், பௌத்த சமயத்திற்கு பாதகம் விளைவிக்காததுமான அரசியல் அமைப்பு ஒன்று கொண்டு வரப்படுமாயின் அதற்கு தாம் ஆதரவளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


உலக அரங்கில் தமிழர்களுக்கு கிடைத்துள்ள ஆதரவை சரியாகப் பயன்படுத்த வேண்டும் – சுமந்திரன்

கடந்த போர்ச் சூழலில் இல்லாத ஆதரவு உலக அரங்கில் தமிழர்களுக்கு கிடைத்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். ‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று (சனிக்கிழமை) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து பேசுகையில், “சந்திரிக்கா தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால் அதனை நான் விமர்சிக்கவில்லை. அந்தந்த சூழலிலே அவர்கள் எடுத்த தீர்மானம் அது. அந்த சூழலுக்கு போய் நாம் தீர்வைக் காணமுடியாது. ஆனால் இதுவரை நாம் தவறவிட்ட அந்த படிப்பினைகளை வைத்து இன்னுமொரு சந்தர்ப்பத்தை நாங்கள் தவறவிடுவோமா? இன்று உலகில் ஒரு நாடு கூட தவறாமல் இலங்கையின்மேலும் படிக்க…


புதிய அரசியலமைப்பு நடவடிக்கை கிணற்றில் போடப்பட்ட கல் போன்றது – சிவசக்தி

புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கை கிணற்றில் போடப்பட்ட கல் போல அசையாது உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார். வவுனியா வடக்கைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், “கடந்த 3 வருடங்களாக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாகக் கூறி புதிய அரசியலமைப்புக்கு கட்சிகளினால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அது வெறுமனவே கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கப்போகின்றதே தவிர அந்த புதிய அரசியலமைப்பானது நாடாளுமன்றத்திலே முன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளப்போவதுமில்லை. அதற்குப் பிற்பாடு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்போவதுமில்லை. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்போவதுமில்லை. எனவே இது எந்வொரு பிரயோசனமும் இல்லாமலே இருக்கப்போகின்றது. தமிழ் மக்களின்மேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !