வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 230 (14/07/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 223ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 11, 25
இடமிருந்து வலம்
01 – 06 விடுதலைப் போராட்டங்களுக்கு வித்தாவது
07 – 09 நம்பிக்கையீனமான இத்தன்மை சிறுபராயத்திலேயே அதிக வளர்ச்சி அடைகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து (குழம்பி வருகிறது, ஒலிபரப்பாகும் பாடலில் ஒத்த சொல் வருகிறது)
15 – 18 கோடுகளால் அமையக்கூடிய வடிவம் அல்லது படிப்படியான வளர்ச்சியில் ஒரு நிலை ( குழம்பி வருகிறது)
19 – 21 மேலும் செலுத்தப்பட வேண்டியது.
28 – 30 அறுபது வரையான கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளக்கூடியது (குழம்பி வருகிறது)
31 – 33 இவற்றை உச்சரிக்கும் போது உடலின் காற்று வெளியேறி நுரையீரலுக்குள் புதிதான உயிர்க்காற்று நிரம்புகிறது என்பது தமிழ் மொழி ஆய்வாளர்களின் முடிவு (வலமிருந்து இடம்)
33 – 36 முற்காலத்தில் விலங்குகளை அச்சப்பட வைக்கவும் பயன்படுத்தப்பட்டது
மேலிருந்து கீழ்
01 – 13 உறவில் அமையாத அந்நியம்
14 – 26 இதன் நிறத்தை கொண்டு நாம் எவ்வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிய முடியும்
03 – 27 ஒன்று மற்றொன்றில் அடக்கம் (குழம்பி வருகிறது)
10 – 28 அக்கறை அல்லது பார்வைக்கு உட்படும் நிலை ((குழம்பி வருகிறது)
17 – 29 முழு முயற்சியுடன் ஒரு செயலை முடிக்கும் ஆர்வம் (குழம்பி வருகிறது)
12 – 24 ஈடுபாடு அல்லது சுவாரஸ்யம் அற்று வெறுமனே கடமையின் நிமித்தம் செய்தலையும் இவ்வாறு குறிப்பிடுவர்
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 229 ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 06 ஆச்சரியம்
07 – 09 தலம்
13 – 15 ஓரம்
20 – 22 மறதி
22 – 24 புழுதி
27 – 29 பித்து
33 – 35 விசிறி
மேலிருந்து கீழ்
01 – 19 ஆதரவு
19 – 25 தீவு
14 – 32 மாற்றம்
16 – 34 சித்திரை
05 – 23 புதையல்
06 – 30 அழுத்தம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 229ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.லாலா ரவி , பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி .சொரூபி மோகன் , சுவிஸ்
திருமதி ஜெயசுதா ராஜன் யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திரு.திக்கம் நடா சுவிஸ்
திருமதி. ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 229ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!