Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 252 (16/02/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 252 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 12

இடமிருந்து வலம்

01 – 04 சமயம்
04 – 06 வீழ்த்தப்பட்ட வீரர்களுக்கு இதனாலான படுக்கை என்பது அன்றைய மரபு (குழம்பி வருகிறது)
07 – 08 வினையெனில் வியப்பிற்குரியது (வலமிருந்து இடம்)
09 – 11 உடல் நலத்தை இதன் மூலமும் கணிப்பதுண்டு
13 – 15 இனிய ஓசை (குழம்பி வருகிறது)
19 – 21 ஒரு வகைப் பேறு
31 – 33 அதிக புத்துணர்ச்சியை அளிக்கும் வகைக்குரியது எனில் உடல் நலத்திற்கு கேடு என்பது ஆய்வாளர்களின் கருத்து (குழம்பி வருகிறது)
34 – 36 மனித மனங்களின் வசியம் (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 07 முதல் எனவும் பொருள் தரும்
13 – 25 நவீன இலக்கிய வடிவம்
26 – 32 காற்றின் விசையில் செலுத்தப்படும் படகுகளில் பயன்படுத்தப்படும் (கீழிருந்து மேல்)
15 – 27 சூரிய இயக்கத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டது (குழம்பி வருகிறது)
04 – 28 நீர்ப்பெருக்குடன் தொடர்புடைய இது மகிழ்ச்சிக்கும் உணர்ச்சிக்கும் கூட பொருந்தும் (கீழிருந்து மேல்)
05 – 17 குறில் அல்லது நெடிலை சுட்டிக்காட்டவும் உதவும் (கீழிருந்து மேல்)
23 – 35 கண்ணோட்டம் (கீழிருந்து மேல்)
18 – 36 சில கடல் வாழ் உயிரினங்களுக்கும் உண்டு

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல251 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 தார்மீகம்
07 – 09 வேகம்
10 – 12 நிதம்
13 – 15 தீபம்
27 – 28 கதை
33 – 36 புன்னகை

மேலிருந்து கீழ்

01 – 13 தாகம்
19 – 25 கோவை
25 – 31 கோடு
08 – 32 ஆரம்பம்
10 – 22 நினைவு
22 – 34 கனவு
05 – 29 பொருத்தம்
06 – 18 நீலம்
18 – 36 சிலம்பு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 251ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா , பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மன்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மன்
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 251 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...