Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 237 (13/10/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 237ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 15,22

இடமிருந்து வலம்

01 – 06 பேச்சில் சிந்தனையில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மை.
08 – 10 உணரக்கூடிய, கண்ணுக்கு புலப்படாத இது, உயிர் வாழ அவசியமானது.
19 – 21 வரிசைக்கிரமத்தில் தொடுக்கப்படுவது.
26 – 28 மனதின் பதிவுகள் (வலமிருந்து இடம்)
31 – 33 சீரான போக்கிலிருந்து தவறுதல் (வலமிருந்து இடம்)
33 – 35 ஒரு வகையான புத்தி பேதலிப்பையும் இவ்வாறு குறிப்பிடுவதுண்டு

மேலிருந்து கீழ்

01 – 13 மனச்சோர்வடையும் தருணங்களில் பலரும் விரும்புவது
19 – 31 கழுத்தைக் குறிக்கும் வட்டார வழக்கு அல்லது உவமை
14 – 26 சூரிய அஸ்தமனத்திற்கும் உதயத்திற்கும் இடைப்பட்டது
04 – 16 ஒளிக்கும் ஓலைக்கும் பொருந்தி வரக்கூடியது (குழம்பி வருகிறது)
05 – 17 பக்கம் என்பதையும் குறிக்கும் (குழம்பி வருகிறது)
17 – 29 குறிப்பிட்ட கலாச்சாரத்தின் படி ஆசி பெரும் பொருட்டு வணக்கத்துக்குரியதாக நோக்கப்படுவது (கீழிருந்து மேல்)
12 – 30 அறுபது வருடங்களை கொண்டது எனவும் கணிப்பதுண்டு.(குழம்பி வருகிறது)
30 – 36 நீர்த்தேக்கங்கள் பலவற்றுக்கு ஊற்று மூலமாக அமைவது
(கீழிருந்து மேல்)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 236 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அதிசயம்
08 – 12 மனசாட்சி
16 – 17 வீடு
21 – 22 இசை
26 – 27 மொழி
33 – 35 தெளிவு

மேலிருந்து கீழ்

01 – 19 அலுப்பு
19 – 31 நட்பு
02 – 20 அனுமதி
21 – 33 இழிவு
28 – 34 துளி
11 – 23 மொட்டு
06 – 18 ஞானம்
18 – 30 தாகம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 236 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
ஜெயந்தி ஜேர்மனி
திருமதி.சித்திரா பவன் நோர்வே
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திரு.திக்கம் நடா
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 236 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...