Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 301 (28/11/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 300 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 05 பிற மொழிச் சொல்லான இது தமிழுக்கானால் இசை

11 – 12 வள்ளுவர் உணர்த்திய உண்ணாமை மற்றும் கொல்லாமை எனும் ஒறுத்தலுக்கானது

15 – 16 இதன் முன் “உ”கரம் இணையும் போது அசௌகரியத்துக்கானது

16 – 17 மரபுரிமையன்றி, வளர்ப்பு மற்றும் ஆளுமைப் பண்புகளாலேயே உருவாக முடியும் (வலமிருந்து இடம்)

19 – 23 அங்கீகாரத்துக்கானது (குழம்பி வருகிறது)

25 – 28 மூத்த தமிழுக்கான பெருமைகளுள் ஒன்று (வலமிருந்து இடம்)

28 – 30 சித்தர்கள் வகுத்தபடியானால் மூச்சு எனப் பொருள் படும் (குழம்பி வருகிறது)

31 – 33 பொருட்பாலின் குடியியல் கற்றுத் தருபவற்றுள் ஒன்று (வலமிருந்து இடம்)

33 – 36 மனதுக்கு இனிமை தரும் உணர்வு

மேலிருந்து கீழ்

01 – 25 நீர்நிலைகளின் சந்திப்பென்றும் கூறலாம்

02 – 26 பேசும் சொற்களிலும் அவசியமாகின்றது (குழம்பி வருகிறது)

09 – 21 வட்டத்தின் காற்பகுதி அல்லது அதன் 90° அளவையும் குறிக்கும் (குழம்பி வருகிறது)

04 – 16 தூது இலக்கியங்களில் இடம் பிடித்தவற்றுள் ஒன்று

06 – 18 இதன் மிகுதியால் எதிர்மறை செயல்களுக்கும் வாய்ப்புண்டு (கீழிருந்து மேல்)

18 – 36 வியர்வையை வெளியேற்றாது என அறியப்பட்டாலும், மிக மிக குறைந்த அளவில் இச் செயற்பாடு நடைபெறுகிறது என்பது விஞ்ஞானிகள் கூற்று

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 301

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 300 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

திருமதி.சொரூபி மோகன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 300ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 சமயம்

10 – 11 நசை

14 – 16 வைரம்

20 – 22 புத்தி

22 – 24 புதிர்

25 – 27 வறுமை

31 – 34 தர்மம்

மேலிருந்து கீழ்

01 – 31 சமத்துவம்

03 – 15 பயம்

04 – 22 நரம்பு

28 – 34 தடை

17 – 29 சோர்வு

06 – 36 சரித்திரம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 300ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 300 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...