Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 238 (20/10/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 238ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 06, 30

இடமிருந்து வலம்

01 – 05 விபரங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்துதல்
10 – 12 மனதில் வளர்க்கும் எண்ணம் எனவும் பார்க்கப்படக்கூடிய இது குறிக்கோளை அடையவும் சிலருக்கு உதவும்
13 – 16 இதன் கண்டு பிடிப்பிற்கு முதன் முதலில் மலையடிவார பாறைகளே உதவியுள்ளன எனவும் கூறப்படுகிறது
25 – 29 வாக்கில் நேர்மை தவறாமையை குறிக்கும் இது சக்தி வாய்ந்தது (குழம்பி வருகிறது)
31 – 33 இசைப்பாட்டு வகைகளுள் ஒன்றென்பதால் தேவாரம் எனும் சொல்லிற்கு அடிப்படையாக அமைந்தது எனவும் கருத்து உண்டு (வலமிருந்து இடம்)
33 – 36 வேளாண்மைத்துறை வளர்ச்சிக்கான புரட்சியை இவ்வாறு அழைப்பர்

மேலிருந்து கீழ்

01 – 25 நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறு படக்கூடிய இவற்றுள் சில விசேட தினங்களுக்கு உரியவையாக வரையறுக்கப்படுவதும் உண்டு
08 – 32 சாமர்த்தியமான, ஒரு விதத்தில் நேர்மையற்ற வழி முறை (குழம்பி வருகிறது)
09 – 27 மென்மையான உணர்வுகளின் இருப்பிடமாக கூறப்படுவது (குழம்பி வருகிறது )
16 – 28 ஏற்றத்தாழ்வு அற்ற நிலை (கீழிருந்து மேல்)
05 – 23 தொடர்ச்சிக்கும் பொருந்தும் (கீழிருந்து மேல்)
12 – 24 தொடராத நிலை (கீழிருந்து மேல்)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 237 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 தடுமாற்றம்
08 – 10 காற்று
19 – 21 சரம்
26 – 28 நினைவு
31 – 33 பிசகு
33 – 35 பித்து

மேலிருந்து கீழ்

01 – 13 தனிமை
19 – 31 சங்கு
14 – 26 இரவு
04 – 16 கீற்று
05 – 17 புறம்
17 – 29 பாதம்
12 – 30 தலைமுறை
30 – 36 மலை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 237 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி
திருமதி.சித்திரா பவன் நோர்வே
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 237 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!