வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 217 (10/03/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 217 ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 07, 35
இடமிருந்து வலம்
01 – 04 கட்டுமானப்பணிகளில் அன்றைய காலம் முதல் இன்று வரை பயன்படுத்தப்படும் இது அழகும் பெறுமதியும் பொருந்தியது.
04 – 06 நிலையற்ற வாழ்க்கையை உணர்த்தவும் உதாரணமாவது.
08 – 12 உகந்ததாக கருதும் ஒன்றில் நாட்டம் கொள்ளும் உணர்வு (குழம்பி வருகிறது)
13 – 17 அகராதியின் முக்கிய பயன்பாடு.
21 – 24 இறையாண்மையுடன் வகுக்கும் நெறிமுறை.
31 – 33 வியாபாரம் போன்றவற்றுக்கான அடிப்படை தொகை (வலமிருந்து இடம்)
மேலிருந்து கீழ்
13 – 31 நேரடி ஒலி, ஒளிபரப்புகள் பெறப்படும் முறையும் இவ்வாறு அழைக்கப்படும்
14 – 26 நாடுகளுக்கிடையேயும் அமைக்கப்படுவதுண்டு (கீழிருந்து மேல்)
09 – 27 செவிப்புலன் அற்றுப் போகவும் காரணமாகலாம் (குழம்பி வருகிறது)
04 – 34 பயபக்தியும் மரியாதையும் மிக்கது
17 – 29 வாத்தியக்கருவிகள் சிலவற்றிலும் உள்ள உள்ளீடற்ற பகுதி (கீழிருந்து மேல்)
12 – 18 தோற்றம் பெற ஏதுவானது
24 – 36 அபிப்பிராயங்களிலும் ஏற்படக்கூடிய இது பிரிவினையை உண்டாக்கும் (கீழிருந்து மேல்)
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 216 ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 05 வெண்கலம்
08 – 12 கிளிஞ்சல்
13 – 18 புவியீர்ப்பு
19 – 21 தவறு
25 – 27 வாடகை
28 – 30 சுட்டி
31 – 33 இடம்
மேலிருந்து கீழ்
01 – 19 வெறுப்பு
21 – 33 வாதம்
22 – 28 நொடி
29 – 35 சுவை
06 – 18 சால்பு
24 – 36 பொட்டு
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 216ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திரு . திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.சித்ரா பவன் நோர்வே
மற்றும்
ஜெயந்தி , ஜேர்மனி
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 216 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!