Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 212 (03/02/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 212 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 11,32

இடமிருந்து வலம்
01 – 04 இலக்கணப்படியானால் தொன்று தொட்டு தொடர்வது
04 – 06 பிரிவினைக்கும் வழி வகுக்கும் (வலமிருந்து இடம்)
08 – 09 செய்திக்கான செயற்பாடு
14 – 17 எதிர் மறையானால் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
19 – 23 அன்பானால் அடங்கும் தன்மையும் அதிகாரமெனில் எதிர்க்கும் போக்கினையும் உருவாக்கும் (குழம்பி வருகிறது) 
26 – 27 தளர் பருவத்தினருடனும் தொடர்புடைய இது அவர்கள் எமக்கிட்ட தடையையும் ஞாபகப்படுத்தும்.
34 – 36 இன்னல் படுவோரை இனங்கண்டு உதவும் செயலுடன் பொருந்தக்கூடியது

மேலிருந்து கீழ்
01 – 19 நிர்வாக பிரிவுகளில் ஒன்றான, குறிக்கப்பட்ட வலயம் எனவும் பொருள் தரும்.
19 – 31 துன்ப துயரங்கள் நேரும் போது குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் (கீழிருந்து மேல்)
27 – 33 நிற வேறுபாடுகள் மூலம் குறிப்பிட்ட சில சமிக்கைகளை எடுத்துக்காட்டும் (கீழிருந்து மேல்)
04 – 22 மனதாலும் அல்லது செயலாலும் செய்யலாம் (கீழிருந்து மேல்)
28 – 34 கல்சியம் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய் (கீழிருந்து மேல்)
17 – 35 எண்ணிக்கையில் இது தமிழின் அடிப்படையில் நுண்மணலில் இருந்து உருவாகியது (குழம்பி வருகிறது) 
12 – 36 ஞானத்தை வெளிப்படுத்த வேண்டிய இதன் மூலம் சிலர் தமது அஞ்ஞானத்தை வெளிக்கொணர்வர்.

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 211 ன் விடைகள் 

இடமிருந்து வலம்
01 – 06 உச்சரிப்பு
09 – 11 சங்கு
13 – 14 வேர்
17 – 18 கார்
25 – 29 பிடிமானம்
33 – 36 துருவம்

மேலிருந்து கீழ்
01 – 19 உணர்வு
08 – 20 வேதம்
26 – 32 ஆடி (விளக்கம்: ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள்.காற்றுக்கு ஆடி மாதம் குறிப்பிடப்படுவதுண்டு.
அடுத்து கறுப்பு ஜூலை..தமிழர்கள் அனைவருக்குமே ஆடி மாதம் என்றாலே முதல் நினைவுக்கு வருவது கறுப்பு ஜூலை)
03 – 21 சங்கதி
04 – 16 சரிவு
17 – 35 கர்வம்
12 – 36 ஏகாந்தம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 211ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்

திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திரு . திக்கம் நடா, சுவிஸ்

திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம் ஜேர்மனி

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திருமதி.சித்ரா பவன் , நோர்வே

திருமதி.லாலா ரவி, பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 211 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!