Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 208 (06/01/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 208 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 17,18,28,29

இடமிருந்து  வலம்

01 – 06 மரபு வழியின்றி நவீனமுறையில் எழுதப்படுவது.

09 – 10 நெற்றிக்கு உவமையாவது

13 – 16 மிகப் பழங்கால முன்னோடிகளின் கலையாற்றலையும் அறிவுக் கூர்மையையும் வியக்க வைப்பவற்றுள் ஒன்று (குழம்பி வருகிறது)

20 – 22 இனங்கண்டறியவும் உதவும் (குழம்பி வருகிறது)

23 – 24 தாமரையும் தண்ணீரும் எனில் ஒட்டாத உறவுக்கு உதாரணமாக அமைவது (வலமிருந்து இடம்)

31 – 36 தொழிலுக்கானால் நன்மை. தொல்லைக்கானால் தீமை

மேலிருந்து கீழ்

01 – 13 பலருக்கும் தாயகமாக மாறிப்போயுள்ளது துரதிஷ்டமே

19 – 31 சில சமயங்களில் நம்ப முடியாமல் போவதுமுண்டு (கீழிருந்து மேல்)

08 – 26 மனித வாழ்க்கையின் நிலையின்மையை எடுத்துக் காட்டுவது (கீழிருந்து மேல்)

15 – 33 குறுகியதானால் பயனில்லை.பரந்து பட்டதானால் பலனுண்டு (குழம்பி வருகிறது)

05 – 11 கணிதம் மற்றும் விஞ்ஞானத்திலும் கூட முக்கியத்துவம் பெறும்

06 – 12 உடலுக்கானால் தடுமாற்றம்.. உள்ளத்துக்கானால் தடம் மாறும்(கீழிருந்து மேல்)

24 – 36 ஒன்றுடன் ஒன்று இலகுவில் இணையக் கூடியது எனவும் கூற கேட்பதுண்டு.

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 207 ன் விடைகள் 

இடமிருந்து  வலம்

01 – 05 சத்தியம்

08 – 09 ஆசை

09 – 12 ஆகாயம்

16 – 17 நூல்

22 – 23 சாலை

25 – 29 சக்கரம்

34 – 36 நட்பு

மேலிருந்து கீழ்

01 – 25 சந்தனம்

20 – 32 சாரம்

03 – 15 ஆஸ்தி

21 – 33 பகல்

11 – 23 சாயல்

06 – 12 காது

18 – 36 கொழுப்பு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 207ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.லாலா ரவி,பிரான்ஸ்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. பிறேமா கைலாயநாதன்,  பிரான்ஸ்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா,  பிரான்ஸ்

திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்

திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம்,  சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திரு.சுந்தரம்பிள்ளை கனகசுந்தரம் யேர்மனி

திருமதி.சித்ரா பவன் ,நோர்வே

திருமதி. விஜி பாலேந்திரா,  பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 207 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!