கவிதை
“ தியாகத்தின் மறவன்” (திலீபனின் பிறந்தநாளுக்கான நினைவுக்கவி)

கார்கால கார்த்திகை இருபத்தி ஒன்பதில் மாண்புமிக்க மாவீரர் மாதமதில் பாரெல்லாம் புகழ ஊரெழுவில் உதித்தானே பார்த்தீபன் உன்னத தியாகத்தால் – இன்று தியாகத்தின் மறவனாய் உலகமே போற்றுதே ! விடுதலைத் தீக்காக பசித்தீயை ஒறுத்தான் பட்டினியாய் கிடந்தான் பன்னிருநாள் யாகத்தில் தன்மேலும் படிக்க...
வருங்காலம் வலுவாக…… கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

தமிழுக்காய் தமை ஈர்ந்து தமிழ்க் காதலால் தம் காதல் துறந்து எமக்காய் மரணித்த மறவர்களை திங்களாம் கார்த்திகையில் காந்தள் மலர் தூவி அர்ச்சிப்போம் காத்திரமாய் காத்திடுவோம் அவர்தம் உறவுகளை ! வருங்காலம் வலுவாக எதிர்காலம் சிறப்பாக வாழ்வாதாரம் மேலோங்க நிகழ் காலத்தில்மேலும் படிக்க...
காந்தள் பூக்கள் “ கவியாக்கம்…ரஜனி அன்ரன் (B.A)

கார்கால மேகம் கருக்கொண்ட வேளையிலே கார்த்திகைத் திங்களில் மழை நீரை உறிஞ்சி நிலத்தைக் கிழித்து எழுந்து படர்ந்து திரண்டு கொடியாகி பூபாள விடியலாய் முகைவிட்டு பூத்துக் குலுங்கும் காந்தள்களே ! கை கூப்பித் தொழுவது போல் மஞ்சள் சிவப்பு வர்ணமாகி மஞ்சரிமேலும் படிக்க...
!!!!.காவியக்கவிஞன்!!!! (பிறந்தநாள் நினைவுக்கவி) – .ரஜனி அன்ரன்….(B.A)

சிறீரங்கம் தந்த கவிச்சுரங்கம் ஐப்பசித் திங்கள்29 இல் உதித்த தமிழ்ச்சுரங்கம் காவியங்களை கானமாக்கிய காவியக்கவி திரையுலகம் கொண்டாடும் திரையிசைக்கவி நரை விழுந்தாலும் வாலிபம் மாறாத வாலிக்கவி கரைகாணா ஆழுமையும் ஆர்வமும் கொண்ட கவி ! வாலியின் வைரவரிகள் வர்ணஜாலம் காட்டும் நறுக்குமேலும் படிக்க...
ஈழத்தமிழிச்சி தமிழினி “ (நினைவுக்கவி)

அன்னைத் தமிழின் ஆரணங்கு அரசியல் துறைப் பொறுப்பாளினி தாய்நாட்டை நேசித்த ஏந்திழையாள் தாய்த்தமிழை சுவாசித்த தமிழினியாள் தாய்நிலத்தில் விதையானாளே இன்றைய நாளாம் ஐப்பசித்திங்கள் 18 இல் ! ஈழத்து தெருக்களை எல்லாம் முழக்கமிட்ட குரல் முடங்கிப் போனதுவே பெண்ணியம் பேசிய கண்ணியமானமேலும் படிக்க...
“ கனவுநாயகன் கலாம் “ (பிறந்தநாள் நினைவுக்கவி)

அக்கினி ஏவுகணையின் சொந்தக்காரன் அண்டத்தை ஆராய்ந்த விஞ்ஞானி அக்கினிச்சிறகினைப் படைத்த படைப்பாளி இந்தியாவின் அணுவிஞ்ஞானி இளையோர்களின் கனவு நாயகன் ஏவுகணையால் நெருப்படா நெருங்கடா என பகைநாடுகளுக்கு சவால் விட்ட நாயகன் ! தேசத்தின் மீது நேசம் கொண்ட தேசபிதா மாணவர் குழாமைமேலும் படிக்க...
” ஆசிரியமும் நானும் ” கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

எழுத்தை அறிவித்தவன் இறைவன் எழுத்தை எடுத்து இயம்புபவன் ஆசான் எந்தத் துறைக்குமே ஈடாகாத ஆசிரியம் எல்லாத் துறையினரையும் உருவாக்குவது மகத்துவமான ஆசிரியம் மட்டுமே மன நிறைவைத் தந்ததே எனக்கும் ! அகில உலக ஆசிரிய தினமாம் அக்டோபர் ஐந்தில் ஆசான்களைப் போற்றிடுவோம்மேலும் படிக்க...
மகாத்மா என்ற மாமனிதன் !!! – கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

மகாத்மா என்ற மாமனிதன்! அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்து அகிம்சை எனும் ஆயுதத்தை கையிலேந்தி அறிவுச் சுடராய் அரசியல் மேதையாய் சுதந்திரத்தை சுவீகரித்த மகானாய் சுதந்திர உணர்வைத் தட்டியெழுப்பிய வீரராய் அக்டோபர் இரண்டில் அவதரித்தாரே ! எளிமையின் வடிவமாய் ஏழைகளைக் காத்து தொண்டின்மேலும் படிக்க...
தந்தை பெரியார் பிறந்தநாள் நினைவுக்கவியாக……ரஜனி அன்ரன் (B.A) 17/09/2018

” பகுத்தறிவுத் தந்தை ” புரட்டாதித் திங்கள் பதினேழில் ஈரோட்டில் பிறந்தாரே ஈ..வே..ரா..பெரியார் வெண்தாடி கறுப்பாடை கண்ணாடி வெளிச்சமாய் காட்டுமே இவரின் அடையாளம் பகுத்தறிவின் தந்தை சுயமரியாதை இயக்கத்தின் பிதா திராவிடத்தின் தோற்றுவாய் ! தமிழர்களின் தன்மான உணர்வை தட்டி எழுப்பியமேலும் படிக்க...
சிறப்புக்கவி (15.09.2018) “ தியாகதீபம் “ – கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)

ஊரெழு பெற்ற மைந்தன் பார் புகழப் பிறந்த வீரன் தேரோடும் வீதியிலே கோரிக்கைகள் ஐந்தினை வைத்து போராடினாரே அகிம்சையோடு ! ஈராறு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி அகிம்சாவாதியாய் அமைதியின் சின்னமாய் துடியாய் துடித்து பசித்தீயை தியாகம் செய்து தியாக வேள்வியில் ஆகுதியாகிமேலும் படிக்க...
பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி ! (நினைவுக்கவி)

அடிமைத் தனத்தை வேரோடு சாய்க்க பெண்ணடிமை முறையை அடியோடு ஒழிக்க சமூக சீர்கேடுகளைக் களைந்து எறிய சாதிமதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க மூடக் கொள்கைகளைத் தகர்த்தெறிய பிறந்தது ஒருபுரட்சிக்கவி எட்டயபுரத்திலே ! கன்னித் தமிழ் அமுதை கச்சிதமாய் வடித்து மெச்சும்படி கவி வடிவம்மேலும் படிக்க...
நினைவுக்கவி……கவிஞர் நா. முத்துக்குமார் !!! ரஜனி அன்ரன் (B.A)

இலக்கிய வானில் சிறகடித்த இளஞ்சிட்டு திரையிசைக்கு கவிமாலை கோர்த்து புகழ்மாலையாய் சூடி மகிழ்ந்த இளவல் சாதிக்க வேண்டிய வயதினில் சாதனை படைக்கவேண்டிய காலமதில் சாவும் அழைத்ததே விரைவில் காவு கொண்டதே ஆவணித் திங்கள் 14 இலே ! இலக்கிய நயமும் இலக்கியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- மேலும் படிக்க