கவிதை
சர்வதேச தாய்மொழி தினத்திற்கான சிறப்புக்கவி “ தமிழும் நானும் “

பொதிகை மலையில் பிறந்து மதுரைச் சங்கத்தில் வளர்ந்து மொழிகளுக்கு எல்லாம் தாயாகி தாய்போல எனைக்காத்து தாலாட்டிய தமிழே செம் மொழியாகி சிறந்து நிற்பவளே தமிழே என் உயிருக்கு உயிரானவளே உனைப் போற்றுகின்றேன் நான் ! நிலவும் வானும் போல் மலரும் மணமும்மேலும் படிக்க...
“தமிழ் வளர்த்த மேலைநாட்டு அறிஞன் “ (ஜி.யூ.போப் நினைவுக்கவி)

மேலை நாடாம் கனடாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பயின்று கிறிஸ்தவ மதத்தில் பற்றாகி தமிழகத்திற்கு சென்று தமிழை நன்கு கற்றுத் தேறி தமிழ்ப்பணி ஆற்றினாரே ஜீ.யூ.போப் ! நாற்பது ஆண்டுகள் தமிழோடு பயணித்து தமிழ் மொழியின் பெருமையினையும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும்மேலும் படிக்க...
“ வீரத்தமிழன் வீரமாமுனிவர் “ (நினைவுக்கவி)

இத்தாலி நாட்டுப்பிள்ளை இயற்பெயரோ பெஸ்க்கி இறை பணியின் நிமித்தம் இந்தியத் தாய்க்கு தத்துப் பிள்ளையாகி தமிழ் தாய்க்கு செல்லப் பிள்ளையாகி தமிழனாக வீரமாமுனிவரென மாறி தமிழனாகவே வாழ்ந்து தமிழகத்தில் மடிந்தாரே மாசித்திங்கள் 4இலே ! வீரத்தமிழன் வீரமாமுனிவன் தீராப்பற்றுக் கொண்டார் தமிழில்மேலும் படிக்க...
மகாத்மா என்ற மாமனிதன்! (நினைவுக்கவி)

அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்து அகிம்சை எனும் ஆயுதத்தை கையிலேந்தி அறிவுச் சுடராய் அரசியல் மேதையாய் சுதந்திரத்தை சுவீகரித்த மகானாய் சுதந்திர உணர்வைத் தட்டியெழுப்பிய வீரராய் வாழ்ந்த மகானை தைத்திங்கள் முப்பதில் சுட்டு வீழ்த்தினானே கயவன் ஒருவன் ! எளிமையின் வடிவமாய் ஏழைகளைக்மேலும் படிக்க...
“ இயற்கையைப் போற்றும் இனிய பொங்கல் “(தைப்பொங்கல் தினத்திற்கான சிறப்புக்கவி )
ஆதவனுக்கு நன்றி சொல்லி ஆவினங்களைப் போற்றி புத்தரிசிப் பொங்கலிட்டு தித்திக்கும் கரும்போடு இயற்கை அன்னைக்கு இன்முகத்தோடு படையலிட்டு அயலவர்களுக்கும் கொடுத்து உண்டு மகிழும் இனிய பொங்கல் ! தரணி போற்றும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருநாள் மரபு சார்ந்த பெருநாள் இயற்கையைப்மேலும் படிக்க...
“ மீண்டொருமுறை “ ( விடை பெறும் ஆண்டுக்கான சிறப்புக்கவி )

உலகையே உலுக்கி உளமதை வருத்தி வாழ்வினை முடக்கி வலியதைத் தந்த இருபது இருபது இன்றோடு விடை பெறுகுதே மீண்டொருமுறை வேண்டாமே எந்த அனர்த்தமும் வேண்டாமே ! உலகளவில் மில்லியனையும் தாண்டி உயிர்களைக் காவு கொண்ட இருபது இருபது இரணமாகி தந்ததே வலியினைமேலும் படிக்க...
“இயேசு பாலன்”(24.12.2020)

பரிசுத்த ஆவியின் ஒளியினிலே மரியன்னை வயிற்றினிலே மனுக்குலத்தை இரட்சிக்க மானிடரை நேசிக்க துன்பங்களைப் போக்கிட துயரங்களை விலக்கிட பாலனாய் வந்தாரே ! வானத்து விண்மீனொன்று மண்ணுக்கு வந்து மன்னுலகை மீட்கப் பிறந்தது மாட்டுத் தொழுவத்திலே மார்கழித் திங்கள் இருபத்தி ஐந்திலே !மேலும் படிக்க...
“ மனித உரிமை “ 10.12. 2020 (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)

மார்கழித் திங்கள் பத்து மானிடர் உரிமை பேணும் மனித உரிமை நாள் மனித உரிமை பிறப்பின் உரிமை மறுப்பதும் பழிப்பதும் வீணர்கள் வேலை மனித உரிமை மறுக்கப்பட்டால் விழிக்க வேண்டுமே உலகமும் ஒழிக்க வேண்டும் உரிமை மீறல்களை ! புயலுக்குப் பின்மேலும் படிக்க...
கைத்தடம் பற்றி……..(மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)

மாற்றுக் கருத்துக்கள் ஏதுமின்றி மாற்றுத் திறனாளிகளுக்காய் மார்கழித் திங்கள் மூன்றினை மகத்துவமாக்கியதே ஐ.நா.வும் மாற்றத்திற்கான விதையாக முன்னேற்றப் பாதையாக ஏற்றி வைத்ததே ஒளிவிளக்கை கைத்தடம் பற்றிச் செல்வோம் நாமும் ! சாதிக்கத் துடிப்பவர்களை குறைபாடுகளை எதிர்த்து நின்று எதிர்நீச்சல் அடிப்பவர்களை உலகைமேலும் படிக்க...
தேசத்தின் பேரொளி !!! 26/11/2020

கடலலைகள் ஆர்ப்பரிக்க காந்தள்கள் முகிழ் விரிக்க காரிருள் சூழ்ந்திருக்க கார்மேகம் குடைபிடிக்க மின்னல் ஒளிதெறிக்க கங்குல் விலத்தி வந்த – கார்த்திகையின் மைந்தனே காலமெல்லாம் நீவிர் வாழ்க ! விடியலின் பேரொளியே வீரத்தின் விளைநிலமே விளைநிலத்தின் சுடரொளியே விதியை மாற்றிய வீரனேமேலும் படிக்க...
“அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா“ (பிறந்தநாள் நினைவுக்கவி)

இராமேஸ்வரத்தின் இமயம் ஒன்று உதயமானதே ஐப்பசித் திங்கள் பதினைந்தில் தாய்மொழி தமிழில் கல்வி கற்று அறிவியல் துறையில் சாதனை பெற்று அக்கினிச் சிறகை விரித்து அண்டத்தை ஆய்ந்தாரே அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா ! காலம் தந்த மகான் மண்ணையும் விண்ணையும் அளந்தமேலும் படிக்க...
“ஆசான்கள்” (சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி)

அவனியைக் காட்டியவள் அன்னை சான்றோர் ஆக்கியவர் தந்தை எண்ணும் எழுத்தும் கற்றுத் தந்து மண்ணும் விண்ணும் போற்றும் வண்ணம் நல் மனிதராக்கியவர் ஆசான்களே சமுதாயத்தின் அச்சாணியான ஆசான்களே உங்கள் சேவைக்கு நன்றி நன்றி ! அறிவிற்கு ஒளியாகி ஆற்றலைத் தூண்டி உயரத்தில்மேலும் படிக்க...
முதியோர் தினத்திற்கான சிறப்புக்கவி ( 01.10.2020)

ஐப்பசித் திங்கள் முதலாம் நாளை ஐ.நா சபையும்அறிவித்து மகிழுது சர்வதேச முதியோர் தினமாக முதியோர் நலன் பேணவும் மூத்தோரைப் போற்றவும் முத்தாப்பாய் தந்ததே ஐ.நா வும் ! மூத்த குடிகளை மதித்து ஆற்றிய பணிகளை நினைவூட்டி அடிப்படைச் சுதந்திரங்களை வழங்கி மூத்தோரின்மேலும் படிக்க...
அகிம்சையின் மைந்தனே “! (நினைவுக்கவி)

அகிம்சையின் மைந்தனே தியாகத்தின் செம்மலே வேரோடு விழுதுகளைக் காக்க பசியை மறந்தாய் பட்டினியைத் தாங்கினாய் உன்னையே ஒறுத்தாய் எமக்காய் உருகினாய் ! பைந்தமிழ் வீரம் காக்க ஐந்தம்சக் கோரிக்கையை காணிக்கை ஆக்கி தாகத்தை பசியை வெறுத்தாய் தியாகத்தைப் புரிந்தாய் யாகத்தில் வெந்தாய்மேலும் படிக்க...
உலக அமைதி நாளுக்கான சிறப்புக்கவி (21.09.2020)

அகில உலகிலும் அமைதி வேண்டி சகல வகையிலும் ஆதரவு கொடுத்து கலகங்களை நிறுத்தக் கோரி உலக அமைதி தினமாக உருவாக்கித் தந்ததே ஐ.நாவும் திங்களாம் புரட்டாதி இருபத்தியொன்றை ! சமாதானமும் அகிம்சையும் சர்வ தேசமெங்கும் மலரவும் தீவிரவாதமும் போர்களும் தூர விலகிப்மேலும் படிக்க...
வாழ்க்கை வாழ்வதற்கே

உந்தன் சிதறிக்கிடக்கும் மனதைஒருபோதும் சேர்த்துவைத்து தைக்க நினைக்காதே…! நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்இருந்துகொண்டுதான்இருக்கும்…! மக்கிய நிகழ்வுகளையும்,அழுகியநிலையில் நீங்காமல்இருக்கும் சில கசப்பான நினைவுகளையும்வேரோடு வெட்டி எறி…! அது புதிதாய் வளரட்டும்…! உன்னை அவமானாம்படுத்திய தருணங்களைஒருபோதும் மறக்காதேஅவை தான் உந்தன்உயர்வுக்கு காரணமாய்மேலும் படிக்க...
“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)

ஏக்கம் மனதை வாட்டதேக்கமாய் நினைவுகள் புதையதுக்கம் தொண்டையை அடைக்கதூக்கத்தைத் தொலைத்துஏக்கத்தை தேக்கமாக்கிதேடும் உறவுகளைத் தேடித் தேடிபூத்தவிழி பூத்திருக்கதொடர்கிறது காத்திருப்பு ! வருவார்கள் என்ற நம்பிக்கையில்நகர்கிறது நாட்களும்வருடமும் பதினொன்றைகடந்து விட்டதுகண்துடைப்பும் தொடர்கிறதுகாணாமல் ஆக்கப் பட்டோர்இன்றுவரை விடையில்லை ! உறவுகளைத் தேடி ஏங்கி ஏங்கிஉருக்குலைந்துமேலும் படிக்க...
“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி)

வன்முறைகளுக்கு சமாதி கட்ட வாக்குவாதங்களுக்கு முற்றுப்புள்ளியிட மாக்களை மண்ணிலிருந்து விரட்ட மலரட்டும் எங்கும் மனிதநேயம் மகிழட்டும் மனித உள்ளங்கள் நெகிழட்டும் உங்கள் நெஞ்சமும் ! இருகரம் கூப்பி வணங்குவதை விட ஒரு கரம் நீட்டி உதவுவது உன்னதமானது என்ற உயரிய நோக்கத்தைமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 9
- மேலும் படிக்க