12வது ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.இராசலட்சுமி செல்லத்துரை
தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Mitry-Mory யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 12வது ஆண்டு நினைவு தினம் 24ம் திகதி நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்னாரை நினைவு கூருகின்றார்கள் அன்பு மகன்மார் கேதீஸ்வரன், ஜோதீஸ்வரன், மகேஸ்வரன், அன்பு மகள்மார் சிவமதி, கலைமதி (லண்டன்)
அன்பு மருமக்கள் அற்புதவதி, யோகேஸ்வரி, மாலினி, தர்மபாலா, பால்ராஜ் (லண்டன்)
மற்றும் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றனர்.
திருமதி.இராசலட்சுமி செல்லத்துரை அம்மாவை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகளும் நினைவு கூருகின்றனர்.
இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரப்பிள்ளைகள் நிக்ஸா, காந்தா, ஜொனா
அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்
ஆண்டுகள் பன்னிரண்டு ஓடி மறைந்தாலும்
அம்மா உங்கள் அன்பான நினைவுகள் மறைவதில்லை!
அம்மா உங்கள் அன்பான பாசமும் அரவணைப்பும் – இன்றும்
எங்கள் உள்ளத்தில் ஊஞ்சல் ஆடுகின்றது!
உங்கள் பிரிவு தாங்க முடியாமல்
கண்ணீர் மழையில் கரைகின்றோம் தாயே!
தூர இருந்தாலும் துடிக்கும் எங்களுக்கு
அருள் மழை பொழிவாய் அம்மா!