Main Menu

எல்லைப் பிரச்சினையை சமாளிக்க ஊடக தந்திரம் மட்டும் போதாது – ராகுல் காந்தி

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை சமாளிக்க மக்கள் தொடர்பு உத்திகளுடன் கூடிய ஊடக தந்திரம் மட்டும் போதாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை சமாளிக்க மக்கள் தொடர்பு உத்திகளுடன் கூடிய ஊடக தந்திரம் மட்டும் போதாது. இந்த சாதாரண உண்மையை உணர மத்திய அரசு மறுக்கின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – சீனா எல்லையில் டோக்லாம் பகுதியில் தொடரும் சீன ஆக்கிரமிப்பு இருநாட்டு உறவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

தற்போது பூட்டான் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா 2 கி.மீ தூரமளவிற்கு கிராமங்களை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய செயற்கைக்கோள் படங்கள் டோக்லாமில் அமைக்கப்பட்டுள்ள கிராமங்களையும் அங்கே 9 கி.மீ அளவுக்கு இடப்பட்டுள்ள சாலைகளையும் காட்டியுள்ளன.

இந்நிலையில் இந்த சர்ச்சையை இந்தியாவுக்கான பூட்டான் தூதர் மேஜர் ஜெனரல் வெட்ஸாப் நாம்கியல் பூட்டான் எல்லைக்கு அருகே சீன கிராமம் ஏதுமில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பகிரவும்...