Main Menu

“ வேந்தனார் பிறந்தநாள் நினைவுக்கவி “

திருப்பல்லாண்டிற்கு சேந்தனார்
கவிதைக்கோ எம் வேந்தனார்
பாடி வைத்தார் பல பாலர் பாடல்கள்
கார்த்திகைத் திங்கள் ஐந்தினில்
பாரினில் உதித்தாரே
என் மண்ணின் மைந்தர்
வேந்தனார் ஐயா !

ஈழம் தந்த தமிழ் அறிஞன்
சைவப்புலவர் பண்டிதர்
சித்தாந்த சிரோன்மணி
எழுத்தாளர் பேச்சாளர்
கவியாற்றல் கொண்ட
வித்துவான் வேந்தனார் ஐயா !

வில்லுக்கு விஜயன்
மல்லுக்கு வீமன்
தமிழ்ச் சொல்லுக்கு
எம் வேந்தனார் ஐயா
நூற்றாண்டு கண்ட பெருமகனை
போற்றுவோம் எந்நாளும் !

தமிழ் ஆசிரியராய் எழுத்தாளராய்
கவிஞராய் மேடைப் பேச்சாளனாய்
பண்பான மனிதராய்
படைப்புக்கள் பலதைத் தந்து
பாடநூல்களையும் ஆக்கி
தமிழுக்கும் தமிழர்க்கும்
பெருமை சேர்த்தாரே
வித்துவான் வேந்தனார் ஐயா !

ரஜனி அன்ரன் (B.A) 05.11.2020

பகிரவும்...