Main Menu

” பாவேந்தர் பாரதிதாசனின் நினைவுநாள் சிறப்புக்கவி “

தமிழுக்கு அமுதென்று பெயர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று
தமிழைப் பாடிய பாவேந்தரின்
நினைவு நாள் சித்திரைத் திங்கள்21 !

மூடப் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிய
சாதிமதக் கொடுமைகளை தூள் தூளாக்க
பகுத்தறிவை விரிவாக்கி பட்டறிவை ஊட்ட
தமிழ்ப்பற்று பொங்கியெழ
பெண் அடிமைத்தனம் நொறுங்க
பிறந்தது ஒரு புரட்சிக்கவி புதுவையிலே !

தமிழ் மொழி மீது தீராக்காதல் கொண்டு
உயிருக்கு ஒப்பாக நேசித்து
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று
தமிழுக்காகவே உழைத்தார் அயராது
தமிழுக்காய் சாகவும் துணிந்தார் !

பாரதிதாசனுடைய கவிநடையும்
அவருடைய உள்ளம் போலவே
வேகம் மிகுந்தது வீர்ம் செறிந்தது
ஆற்றலும் ஆளுமையும் நிறைந்தது
உணர்த்தும் கருத்துக்களில்
உணர்ச்சிப் புயலும் வீசும் !

பாரதிதாசன் ஒரு தமிழ்க்கவி
தமிழின் மறுமலர்ச்சிக்காய் தோன்றியகவி
தமிழ்மொழி தமிழ்நாடு தமிழினம் என்று
உணர்வோடு பாடிய புரட்சிக் கவிஞனை
சித்திரைத் திங்கள் 21இல் நினைவிற் கொள்வோம் !

கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A) 21.04.2021

பகிரவும்...