Main Menu

முற்றத்துக் கவிஞன் (பிறந்தநாள் கவி)

முற்றத்துக் கவிஞன் முதுபெரும் கவிஞன்
சிற்பக்கலையிலும் சிறந்த விற்பன்னன்
கலை பண்பாட்டுக் கழகத்துப் பொறுப்பாளன்
போராட்ட வரலாற்றின் புதுவைக் கவிஞன்
போர்க்கால இலக்கியத்திற்கு புது இலக்கணம் வகுத்து
புரட்சிப் பாக்களை எழிற்சியோடு யாத்த கவிஞன்
புத்தூரில் உதித்தாரே மார்கழித் திங்கள் மூன்றினிலே !

கவிதைகளால் உரமூட்டி கானங்களால் இசைகூட்டி
விடியலுக்காய் எழிற்சியூட்டிய வித்தகக் கவிஞன்
நெருப்பான பாடல்களை விருப்போடு எழுதிக் குவித்து
வாழ்வியல் நம்பிக்கைகளை வனப்பாக்கி
அழகியல் உணர்வுகளைப் பாக்களாக்கி
விடியல் பயணத்திற்கு வீச்சாக மூச்சாக
இசைத்தாரே பாக்களை எழிற்சியோடு !

தமிழர் வாழ்விற்கு உரம் சேர்த்து
தன்மானத்திற்கு வலுச்சேர்த்து
கால நதியாகப் பயணித்து
காலத்தின் படைப்புக்களை காத்திரமாய் தந்து
காலத்தின் குரலான புதுவைக்கவி
கவியுலகிற்கு கலங்கரை விளக்கு
கவியுலகின் ஒளியினைத் தேடுகிறோம் நாமும் !

ரஜனி அன்ரன் (B.A) 03.12.2021

பகிரவும்...