Main Menu

“பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி” (பிறந்தநாள் நினைவுக்கவி )

தைத் திங்கள் ஏழில்
தெல்லிப்பழையில் உதித்து
தமிழ் ஆசிரியையாய் பணியாற்றி
தமிழுக்கும் சைவத்திற்கும்
தனிப்பெரும் தொண்டுகள் செய்து
தன் வாழ்வையே அர்ப்பணித்தார் பொதுப்பணிக்காய் !

ஈழத்தின் ஆன்மீகச் சொத்து
சொற்பொழிவின் வித்தகி
அநாதைகளின் தாய்
ஏழைகளின் தோழி
ஆதரவு இல்லங்கள்
அறக் கட்டளைகள் அமைத்து
அடைக்கலம் கொடுத்த அன்புத்தாய் !

நாவன்மையால் நானிலம் அளந்து
சொல்வன்மையால் சொற்பொழிவுகளாற்றி
அறங்காவல் பணியினை
ஆளுமையோடு கையாண்டு
அன்னைத் தமிழையும்
அரும்பெரும் சைவத்தையும்
அக்கறையோடு பேணிக் காத்தார் !

துர்க்கையின் தீவிர பக்தையாகி
துர்க்கை அம்மனை துதித்து
நிர்வாகப் பொறுப்பினையும் ஏற்று
மணி மண்டபங்கள் கட்டி
சித்திரத் தேரும் அமைத்தாரே !

ஆதரவற்ற பெண்களுக்கு
அடைக்கலம் கொடுத்து
ஆதரவு இல்லங்களும் அமைத்து
அறங்காவல் பணியினை
அறத்தோடு செய்தாரே
இன்றைய பிறந்தநாளில்
நினைத்திடுவோம் சிவத்தமிழ்ச்செல்வியை !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 07.01.2020

பகிரவும்...