Main Menu

நவாலியூர் ஜோதி (சோமசுந்தரப்புலவர் நினைவுக்கவி)

நவாலியூர் ஜோதி
நாமமோ சோமசுந்தரனார்
தங்கத் தாத்தாவென
பங்கமின்றி அழைத்தனரே
பாசம் மிகப் பொங்கி !

ஆங்கிலமொழி ஆட்சியிலே
அன்னை மொழியை, அரும்பெரும் சைவத்தை
அழிய விடாமல் காத்து
நாவலரின் பணி தொடர்ந்தாரே
நவாலியூர் சோமசுந்தரனார் !

வட்டுக் கோட்டையிலே
கட்டான பாடசாலையை நிறுவி
எட்டுத் திக்கும் புகழ் பரப்ப
பட்டொளி வீசி பைந்தமிழை வளர்த்தாரே
பாவலர் சோமசுந்தரனார் !

கவிபாடும் திறனும் நடிப்புத் திறனும்
புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது
சிறுவர்களுக்காகவே படைத்தார்
கத்தரித் தோட்டத்து வெருளியும்
ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலையும் !

தமிழுக்கு ஒளி கொடுத்த ஜோதி
பாமாலைகள் பலவும் பாடிய பாவலர்
ஆடித் திங்கள் இருபத்திஏழு
ஆயிரத்தி தொளாயிரத்து ஐம்பத்தி மூன்றிலே
இவ்வுலகை விட்டு ஏகினாரே !

பகிரவும்...