Main Menu

கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஸ்பெயின் அறிவிப்பு

ஸ்பெயின், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பானது மற்றும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவிற்கு வருபவர்களை கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவித்தமை தொடர்பாக ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள பதிலிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்கு முன்னர் நாடு தனது அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவந்த போதிலும், பார்சிலோனா, சராகோசா மற்றும் தலைநகர் மாட்ரிட் உள்ளிட்ட நகரங்களில் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை 900 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் இதனை அடுத்து வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடர்பாகவும் அரசாங்கம் எச்சரித்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டலோனியா பகுதியில் உள்ள அனைத்து இரவு விடுதிகள், மதுக்கடைகளையும் மூடுவதாக அரசு அறிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் ஸ்பெயினிலிருந்து வரும் மக்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நோர்வே அறிவித்துள்ளது.

அத்தோடு பிரான்ஸ் தனது குடிமக்களை கட்டலோனியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளதோடு ஸ்பெயினில் உள்ள பல பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கு பயணத் தடையையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...