Main Menu

இறப்பு அபாயத்தைக் குறைக்க குறைவாக சாப்பிட வேண்டும் – பிரித்தானிய அரசு வேண்டுகோள்

உடல் பருமன் அதிகமாக இருக்கும் கொரோனா தொற்று நோயாளி ஒருவர் இறக்கும் அச்சம் காணப்படுவதால் பிரித்தானிய மக்கள் தங்கள் எடையை குறைக்க, குறைந்தளவில் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என இளநிலை சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

40 க்கும் மேற்பட்ட உடல் நிறை குறியீட்டெண் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் ஆபத்து இரட்டிப்பாக உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ஹெலன் வோட்லி தெரிவித்துள்ளார்.

உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருப்பது கடுமையான நோய் அல்லது கொரோனா இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்புக்கு முன்னதாக இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...