Main Menu

“அனைத்துலகப் பெண்கள் தின சிறப்புக்கவி”

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பெண்களுக்காய்
ஓங்கிக் குரல் கொடுக்கப்பட்ட
ஒப்பற்ற ஓர் தினமே
அனைத்துலகப் பெண்கள் தினமாச்சு
பங்குனித் திங்கள் எட்டினிலே !

நூற்றிப் பதின்மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு
ஆயிரத்தி தொளாயிரத்தி எட்டினிலே
உழைக்கும் பெண்கள்
பூவாக இருந்த பூவையர்கள்
புயலாகப் புறப்பட்டனர் போராட
போர்க்கொடி தூக்கி வீதியிலே !

வேலை நேரத்தைக் குறைக்கவும்
வேலைக்கு ஏற்ற ஊதியத்தைக் கேட்டும்
வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்தியும்
பாலினப் பாகுபாட்டை எதிர்த்தும்
உரிமையோடு நடத்தினர் பேரணியினை
அமெரிக்காவின் நியூயோர்க் நகரினிலே
இந்த நாளே அனைத்துலகப் பெண்கள் தினமாச்சு !

அமெரிக்காவில் தொடங்கிய போராட்டம்
ஒஸ்ரியா ரஸ்சியா டென்மார்க்
ஜேர்மனி சுவிஸ் இத்தாலி என
தொடர்ந்தது தொடராக
வெடித்தது போராட்டமும்
உலகப் பெண்களின்
போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி நாளே
அகில உலகப் பெண்கள் தினமாச்சு !

வீட்டுச் சிறைக்குள் இருந்த பெண்கள்
விண்வெளியைச் சுற்றி வருகின்றனர் இன்று
நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்று
ஆட்சி புரிகின்றனர் சிம்மாசனத்தில் அமர்ந்து
ஆணுக்கு நிகராக அத்தனை துறையிலும்
அசத்துகின்றனர் பெண்கள் இன்று !

போராட்டமாக தொடங்கிய
பெண்கள் எழிற்சி கொண்டாட்டமாகி
சுதந்திரம் சமத்துவம் பிரதிநிதித்துவம் பெற்று
அனைத்துலகப் பெண்கள் தினமாச்சு
அனைத்துலகப் பெண்களுக்கும் நல்வாழ்த்துக்கள் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 08.03.2021

பகிரவும்...