Day: March 8, 2021
13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு
நீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப் படுத்தியிருந்தால் இலங்கைக்குமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.குமுதா சந்திரசேகரம் (08/03/2021)
தாயகத்தில் யாழ். தாவடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி குமுதா சந்திரசேகரம் அவர்கள் (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) 08/03/2021 திங்கட்கிழமை இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான இராமலிங்கம் நல்லம்மா தம்பதிகளின்மேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் போராட்டம்!
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 6ஆம் நாளான இன்று (திங்கட்கிழமை), சர்வதேச மகளீர் தினமாகையினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு- மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலிலேயே இந்த போராட்டமும்மேலும் படிக்க...
புது விதமான அரசியல் கலாசாரத்தைக் கட்டி எழுப்புவதைப் பற்றி சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டும் – நஸீர் அஹமட்
தீவிரவாத போக்குகளை நாம் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்கின்ற ஒரு புதுவிதமான அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதைப்பற்றி சிறுபான்மையினர் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களில் ஒருவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார். கொரோனாமேலும் படிக்க...
நெருப்புடன் விளையாடும் அபாயகரமான கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்: பைடனுக்கு சீனா எச்சரிக்கை!
தாய்வானுக்கு ஆதரவு காட்டும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், ‘தாய்வான் பிரச்சினையில் சீன அரசாங்கம்மேலும் படிக்க...
“அனைத்துலகப் பெண்கள் தின சிறப்புக்கவி”
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பெண்களுக்காய் ஓங்கிக் குரல் கொடுக்கப்பட்ட ஒப்பற்ற ஓர் தினமே அனைத்துலகப் பெண்கள் தினமாச்சு பங்குனித் திங்கள் எட்டினிலே ! நூற்றிப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்தி தொளாயிரத்தி எட்டினிலே உழைக்கும் பெண்கள் பூவாக இருந்த பூவையர்கள் புயலாகப் புறப்பட்டனர்மேலும் படிக்க...
மியன்மாரில் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு
மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானமேலும் படிக்க...
ஆங் சாங் சூகியின் கட்சி உறுப்பினர் பொலிஸ் காவலில் உயிரிழப்பு: மியன்மாரில் தொடர்கிறது போராட்டம்!
மியன்மார் தலைவர் ஆங் சாங் சூகி கட்சியின் உறுப்பினரான கின் மங் லற் (Khin Maung Latt) என்பவர் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி, இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பரவலாகப் போராட்டங்களை முன்னெடுத்தார் எனவும், நேற்று சனிக்கிழமை இரவு அவர்மேலும் படிக்க...
நாடாளுமன்றம் மீண்டும் கூடியது : முக்கிய சட்டமூலங்கள் குறித்த பரிசீலனை இன்று!
வரவு செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடியுள்ளது. இதன்போது குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றனர். மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன் கார்கே பொறுப்பேற்றுள்ளார். எதிர்கட்சி தலைவராகமேலும் படிக்க...
அரச குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த ஹரி- மேகன் மார்க்கல்!
பிரித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ்மேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்பு!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்களும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்களை கௌரவப்படுத்தும் நிகழ்வுகள், பெண்மையை போற்றும் செயல்பாடுகளை அரசுகளும் அமைப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் டெல்லி சிங்கு, மேலும் படிக்க...
உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று
உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1789ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின்போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தியதோடு, ஆணுக்கு நிகராகமேலும் படிக்க...
மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில் களனி ரஜ மஹா விகாரையில்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்மேலும் படிக்க...
தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த இளம் குடும்ப பெண் படுகாயம்- மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு- காத்தான்குடி, நொச்சிமுனை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து, அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த சம்பவத்தில், நொச்சிமுனை- இசை நடனக்கல்லூரி வீதி, முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் தீப்பந்த போராட்டம்!
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்படவுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் குறித்தமேலும் படிக்க...
“நாடும் தேசமும் உலகமும் அவளே ” எனும் தொனிப்பொருளில் யாழில் மகளீர் தினம்!
“நாடும் தேசமும் உலகமும் அவளே ” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.குறித்தமேலும் படிக்க...