”நடிப்புலகின் இமயம்” (பிறந்தநாள் நினைவுக் கவி)

தமிழ் சினிமாவின் தவப்புதல்வன்
தன்னிகரில்லா நடிப்பின் இமயம்
நடிப்புலக வரலாற்றின் சரித்திரம்
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன்
திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞன்
திங்களாம் ஐப்பசி ஒன்றில் உதித்தாரே !
நடிப்பிற்கே நடிப்பைக் கற்றுக் கொடுத்தவர்
தன்னையே நடிப்பிற்காய் அர்ப்பணித்தவர்
கலைஞரால் வரையப்பட்ட சித்திரம்
நடிப்புலகின் மேதை
நடிப்பிலே எட்டினார் சிகரத்தை !
நடிப்புலகின் இமயம்
ஏற்காத பாத்திரங்கள் இல்லை
போடாத வேஷங்கள் இல்லை
ஏறாத மேடைகளும் இல்லையே
திருக்குறளால் ஏழுலகையும் ஆண்டார் திருவள்ளுவர்
திரைக்குறள்களால் உலகமக்கள் அனைவரதும்
உள்ளங்களையும் ஆண்டாரே நடிகர் திலகம் !
திரையுலகில் புயலாய் அறிமுகமாகி
சூறாவளியாய்க் கலக்கி
வரலாறாய் வாழ்ந்து மறைந்து
வரலாறு ஆகிவிட்ட
நடிப்புலக இமயத்தின் புகழ்
என்றுமே மங்காது மறையாது
கலையுலகம் இருக்கும் வரை ஓங்கி ஒலிக்கும் !
ரஜனி அன்ரன் (B.A) 01.10.2019
பகிரவும்...