Main Menu

சுதந்திரக் கட்சியின் கொள்கையினை ஏற்க மறுத்த பொதுஜன பெரமுனவினர்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டம் நேற்று கூடியுள்ளது.

இக் கூட்டத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் விடயத்தில் ஏற்பட்டுள்ள சட்ட நெருக்கடிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து பயணிக்க வேண்டுமாயின் இந்த கூட்டணி பொதுவான சின்னத்தில் பயணிக்க வேண்டும், பொதுவான கொள்கை திட்டம் ஒன்றினை வகுக்க வேண்டும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன முன்னணியும் இணைந்து பொதுத் தேர்தலில் பயணிக்கும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கணிசமான ஆசனங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் கொடுக்கவுள்ள அந்தஸ்து குறித்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமது கோரிக்கைகளாக முன்வைத்துள்ளது. 

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கையுடன் பொதுஜன முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் முரண்பட்டுள்ளனர். குறிப்பாக பொதுவான சின்னத்தை ஏற்பதில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

பகிரவும்...