Main Menu

“ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் “ ( நினைவுக் கவி )

தமிழுக்கும் திருமறைக்கும்
தனித்துவமான தொண்டுகள் புரிந்து
பன்மொழிப் புலமையும் பெற்று
ஒப்பியல் அகராதியையும் படைத்து
ஒப்பற்ற பல நூல்களையும் ஆக்கி
தைத் திங்கள் 22 இலே இவ்வுலகை விட்டு
நீங்கினாரே சுவாமி ஞானப்பிரகாசர் !

மறைநூல் வல்லுனராய்
மத போதகராய்
மொழி வள ஆழுமையாளராய்
மொழி ஆராட்சியாளராய்
பன்மொழி அறிஞராய் என
பவனி வந்தாரே இவ்வுலகில் !

தமிழே உலகத் தாய்மொழியென
தரணியில் பறை சாற்றிய தமிழன்
தன்னிகரில்லாப் பன்முகப் புலவன்
தனக்கெனத் தனி முத்திரை பதித்து
சொல் ஆராட்சியோடு
தொல் ஆராட்சியும்
ஒப்பியல் ஆய்வும் செய்த
ஒப்பற்ற மாமேதை !
நடமாடும் நூலகமாய் நடமாடி
துறவியாய் இருந்த போதும்
தாய் மொழிக்காய் பணி புரிந்து
தமிழ்ப்பணி வரலாற்றுப்பணி திருப்பணியென
தன் வாழ்வையே அர்ப்பணித்தாரே !

அறிவுக் கடலான சுவாமிக்கு
அரசும் நினைவு முத்திரை வெளியிட்டு
வியப்பில் ஆழ்த்தியதே சுவாமியை
தமிழ் கூறும் நல்லுலகம்
நற்றமிழுக்காய் உழைத்து
தமிழையே உயிராகக் கொண்ட
ஞானப்பிரகாச சுவாமிகளை என்றும்
நன்றிப் பெருக்கோடு நினைவு கூருகின்றதே !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 22,01,2020

பகிரவும்...