Main Menu

“செவிலியர்கள்” (செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி)

புனிதப்பணி செய்த
புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையாரின்
பிறந்த நாளே செவிலியர் தினமாகி
சேவை போற்றும் நாளாகி
உலக செவிலியர் தினமாகியதே
இன்றைய நாள் 200 வது பிறந்தநாளாகிறது
விளக்கேந்திய பெருமாட்டியை நினைவில்
கொள்வோம் நாமும் !

வெள்ளைப் புறாக்களென
கொள்ளை அன்போடு
சேவை செய்திடும் தேவதைகள்
மருத்துவருக்கும் மேலாக
மகத்தான சேவை செய்யும்
மனிதப் பிறவிகள் செவிலியர்கள் !

அருவருப்பு ஏதுமின்றி
அர்ப்பணிப்போடு பணி செய்து
பரபரப்போடு வலம் வரும் பணியாளர்களே
கருணையின் ஜீவநதியானவர் நீவிர்
காருண்ணிய சீலர்கள் நீவிர்
உங்கள் பணிக்கு நன்றி நன்றி !

உயிர்நலம் காக்கும் தியாகப்பணி
உடல்நலம் பேணும் அறப்பணி
உயிரிலும் மேலான உம் தவப்பணி
உன்னதமான சேவைப்பணி
உலகினில் நிகரில்லை எப்பணிக்கும் !

அவசரகால வேளையிலும்
ஆபத்தான நேரத்திலும்
கொரோணாத் தொற்றிலும்
பிறர் நலன் பேணி
தூய பணி செய்யும் தூயவர்களே
உம் சேவைக்கு நன்றி !

உங்கள் கைகளில் தானே
எம் ஜனனம் ஆரம்பம்
அன்னை அணைக்க முன்பே
அன்புக் கரத்தால் எடுத்து
அன்னையிடம் கொடுத்து
அன்பால் அணைத்த செவிலியரே
எம் செவிலித்தாய் நீவீர் தானே
உங்கள் பணிக்கு நன்றி நன்றி !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 12/05/2020

பகிரவும்...