Main Menu

கொரோனா அச்சுறுத்தல் குறித்து அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் உண்மையா? – புத்திக பத்திரன சந்தேகம்

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அரசாங்கம் வெளியிடும் அனைத்துத் தகவல்களும் உண்மையா எனும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கமானது, இலங்கையில் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகைத் தருபவர்களுக்கு மட்டும்தான் கொரோனா தொற்று உள்ளது என தெரிவித்துள்ளது.

இதனை அரசாங்கம் மிகவும் பொறுப்புடன்தான் கூறியுள்ளது. அப்படியான ஒரு நிலைமை காணப்பட்டால் நாட்டில் ஊரடங்கை தளர்த்தியுள்ள விவகாரம் தொடர்பாக எமக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.

ஆனால். அரசாங்கம் வெளியிடும் இந்த கருத்துக்கள், புள்ளிவிபரங்கள் என அனைத்தும் உண்மையா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசாங்கம் எந்தத் தருணத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஆபத்து முற்றுமுழுதாக நீங்காத காரணத்தினால் மக்களும் சமூக இடைவேளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...