Main Menu

“ கவிவேந்தன் வேந்தனார் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )

ஈழம் தந்த பேரறிஞனை
நூற்றாண்டு கண்ட வேந்தனை
என் ஊரின் மைந்தனை
கார்த்திகைத் திங்கள் ஐந்தில்
நினைத்திடுவோம் பிறந்த நாளில் !

ஈழத்து இலக்கியத் துறையில்
ஈடுபாடு கொண்டு
ஈடு இணை இல்லாது
இலக்கியப் படையல்களை
கட்டுரைகளாய் கவிகளாய்
பாடநூல்களாய் சிறுவர் பாடல்களென
நிறைவான படைப்புக்களைத் தந்து
தமிழுக்கு பெருமை சேர்த்தாரே !

பாரதி வழி வந்த மரபுக்கவிஞன்
மக்கள் இலக்கியம் படைத்த இலக்கியவாதி
மரபினைப் பேணிய புதுமைவாதி
முற்போக்கு கொண்ட சிந்தனைவாதி
பொதுவுடமையை ஏற்ற பொதுவுடமைவாதி
மொத்தத்தில் கவிவேந்தன் ஒரு பல்துறைவாதி !

இலக்கியச் செழுமையும்
இலக்கணப் புலமையும்
கவிபுனையும் ஆற்றலும்
பேச்சாற்றல் சொல்லாற்றலென
வித்தகனாய் விளங்கிய கவிவித்துவான்
தமிழ் மறுமலர்ச்சிக்காய்
தயங்காமல் குரலும் கொடுத்தாரே !

பாரதியைப் போல்
பட்டுக் கோட்டையைப் போல்
கவிவேந்தனின் வாழ்வும்
குறுகியதாக இருந்த போதும்
நிறைவான படைப்புக்களைத்
தரமாகத் தமிழுக்குத் தந்து
தமிழுக்குப் பெருமையும் சேர்த்தாரே !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 05.11.2019

பகிரவும்...