Main Menu

” இலங்கையர்கோன்” (நினைவு தின சிறப்புக் கவி)

ஈழத்து சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி
சிவஞானசுந்தரம் இவரின் இயற்பெயர்
சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றினார் பெரும்பங்கு
முதற்சிறுகதையாக ஆக்கினார் மரிய மதலேனாவை
நாடகத்திலும், விமர்சனத்திலும் காட்டினார் ஆர்வம் !

ஆக்கினார் பல சிறுகதைத் தொகுப்புக்களை
மொழி பெயர்த்தார் பிற நாட்டுக் கதைகளை
சேக்ஸ்பியரின் நாடகத்திலும் பறிகொடுத்தார் மனசை
எழுதிக் குவித்தார் தொடர் நாடகங்களை
இலங்கை வானொலியிலும் ஒலித்தது நாடகங்கள்
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார் இலங்கையர்கோனும் !

வெள்ளிப் பாதசரம் என்ற சிறுகதைத் தொகுப்பு
அள்ளிக் கொடுத்தது பாராட்டுக்களை
அடையாளப்படுத்தியது இலக்கிய உலகிற்கு
உயர்தர வகுப்பில் தமிழ்ப் பாடத்திட்டத்திலும்
உன்னத அங்கமானது வெள்ளிப் பாதசரம் !

இனங்கண்டேன் நானும்
இலங்கையர்கோனை அன்று
குறுகிய காலமே வாழ்ந்த
சிறுகதையின் முன்னோடி
ஐப்பசித் திங்கள் பதின்நான்கில்
அகவை நாற்பத்தியாறில்
இவ்வுலகை விட்டு நீங்கினாரே !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 14,10,2019

பகிரவும்...