Main Menu

நாட்­டுக்கு சேவை­யாற்­றவே மக்கள் ஆணை­யினை கோரு­கின்றேன் : கோத்தாபய

நாட்­டுக்கு சேவை­யாற்­றவே மக்கள் ஆணை­யினை கோரு­கின்றேன். தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்தி அனைத்து இனத்­த­வர்­களும் சுதந்­தி­ர­மாக வாழும்  சூழலை   எம்மால்  ஏற்­ப­டுத்த முடியும் என பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்தாபய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

எஹ­லி­ய­கொட பிர­தே­சத்தில் கடந்த சனிக்­கி­ழமை இடம்பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர்  மேலும் உரை­யாற்­று­கையில்,

தேசிய பாது­காப்பு, பொரு­ளா­தாரம் இவ்­வி­ரண்டும் ஒரு நாட்டின் அனைத்து துறைசார் முன்­னேற்­றத்­திலும் பாரிய செல்­வாக்கு செலுத்­து­கின்­றன.  ஆனால் இவ்­வி­ரண்டும் இன்று கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளன.

வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பி தேசிய பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்த  வேண்­டிய சவால் காணப்­ப­டு­கின்­றது.அனைத்து துறை­க­ளிலும் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சி­யினை சீர்செய்­வ­தற்­கான முறை­யான கொள்­கைகள் வகுக்­கப்­பட்­டுள்­ளன. அவை முறை­யாக  செயற்­ப­டுத்­தப் ­படும்.

30 வருட சிவில் யுத்தம் முடி­விற்கு கொண்டுவரப்­பட்டு  தேசிய  பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டது.  ஆனால் இன்று மீண்டும் தேசிய பாது­காப்பு  பாரிய அச்­சு­றுத்­தலை எதிர்கொண்­டுள்­ளது. தேசிய பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­தினால் மாத்­தி­ரமே நாட்டு மக்கள் அனை­வரும் அச்­ச­மின்றி வாழ முடியும். அனைத்து இன மக்­களும் சுதந்­தி­ர­மாக  வாழும் சூழல் எம்மால் ஏற்­ப­டுத்­தப்­படும்.

கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்ட  தேசிய  பாது­காப்­பினை  பலப்­ப­டுத்தி, உட் கட்ட­மைப்பு அபி­வி­ருத்­தி­யுடன் பாரிய சேவை­யினை மக்­க­ளுக்கு குறுகிய காலத்தில் மேற்கொண்டுள்ளோம். அதன் காரணமாகவே மக்களாணை யினை கோருகின்றோம். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் சிறந்த ஆட்சி  மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க  வேண்டும் என்றார்.

பகிரவும்...